பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹரான்ட் மாடவோசியன் 169 ‘'நீ எப்போது நகரிலிருந்து இங்கே வந்தாய், நாகரீக குமாரி??? -

  • ஆகவே நான் வருவதைப் பார்த்துவிட்டுத்தான் நீ தேனை வெளியே எடுத்தாயா? உனக்கு நன்மை உண்டாகட்டும்!”

'ஓ, நிச்சயமாக! முதலமைச்சர் வருவதை நான் பார்த்தேன். ’’ அவள் தோள்களின் மீது கயிறுகளை நகர்த்தினள். 'ஏன், ஒரு முதலமைச்சரைவிட நான் மோசமாகவா இருக்கிறேன்?’’ 'நேர் எதிர்தான். எந்த அமைச்சருக்கும் இதுபோல் ஒரு சுமை இல்லை.’’ ஆண்ட்ரோ சிரித்தான். "அது நாசமாய்ப் போக் என் கைகள் மரத்துவிட்டன. அவற்றில் உணர்ச்சி கொஞ்சம்கூட இல்லை.” ‘'நீ ஏன் கயிறுகளை இவ்வளவு இறுகலாய்க் கட்டிய்ை?’’ 'நான் கட்டவில்லை. அறுப்பவர்கள் கட்டிவிட்டார்கள்.” 'நீ மலையிலிருந்து அவ்வளவு தூரமுமா இதைச் சுமந்து வந்தாய்?’’ 'இப்போது வேறு எந்த இடத்திலும் புல் இல்லையே. இருக்கிறதா என்ன?’’ " உனக்கு நன்மை பெருகட்டும்! நீ நகரிலிருந்து என்று வந்தாய்?’’ - நேற்று.”* 'பாவாடை எப்படிப் போயிற்று?’’ 'அங்கே பாவாடை மலை மலையாய்க் குவிந்திருக்கிறது. யாருக்கும் அது தேவைப்படவில்லை.” 'நீ அங்கே அதிக நாள் இருந்தாயா?’’ 'நான்கு நாட்கள்.” அது வெளிப்பட்டிருக்கிறது.’’ * அதாவது நான் அழகியாகியிருக்கிறேன் என்கிருய்?’’ "ஆமாம்.’’ 'உன் மனைவியைப்போல் இல்லை.” 'உனக்குக் கூர்மையான கண்கள். அதில் சந்தேகமில்லை. என் கையில் இருக்கிற ஈக் கொடுக்கை நீ ஏன் பிடுங்கக்கூடாது?’’ அது எப்படி வீங்கியிருக்கிறது பாரேன்.’’