பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XX சிறிய, மதிப்பே இல்லாத தொடர்புகளிலேயே அவர்கள் வசிக்கிருர்கள். வாழ்க்கையின் ஜீவாதார ஓட்டத்துக்குப் புறம்பாகத்தான் அவர்களது பேச்சுகள் இயங்குகின்றன. இத்தகையதுதான் 'நண்பர்கள்’ என்ற கதை. அதில் கதாநாயகனை கிழட்டு பிரமச்சாரி போகோஸினின் ஒரே சிநேகிதனும் பேச்சுத் துணையாகவும் இருப்பது வீட்டில் வளரும் பூனைதான். இப்படிப்பட்டதுதான் 'ஒரு குளிர்கால இரவு' என்ற கதையும். ஒரு துக்ககரமான, அலுப்பூட்டும் அர்த்தமற்ற வாழ்க்கை, உள்ளது உள்ளவாறு அதில் சித்திரிக்கப்படுகிறது. வாழ்க்கையில் செய்வதற்கு எதுவுமே இல்லாத ஒரு புருஷனுக்கும் அவன் மனைவிக்கும், அவர்களுக்கிடையே எப்போதாவது நிகழ்கிற சம்பந்தமற்ற பேச்சுத் தொடர்தான் ஒரே ஆறுதலாக அமைகிறது. இவ்விதம் அவரது பல புத்தகங்களிலும் அநேக கதைகள் இருக்கின்றன. அவற்றில் துயரம் நிறைந்த சிறிய மனிதர்களின், ஒன்றையொன்று சார்ந்த, தொடர்கின்ற, உருவகங்களும் பிம்பங்களும், துன்பியல் சித்திரங்களாகவும் வேடிக்கைக் கதைகளாகவும் படைக்கப்பட்டிருக்கின்றன. இந்தவிதமான உருவங்கள் டி. தெமிர்ச்யனின் படைப்பு களிலும் விசித்திரமாக வெளிப்படுகின்றன. அக் கதைகளில் காணப்படுகிற பல்வேறு ரகங்களும் வளமான பாரம்பரியமும் சேர்ந்து, 1910களில் ப ைட க் க ப் ப ட் ட கதைகளிடையே அவற்றுக்கு ஒரு தனி ஸ்தானத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன. உளஇயல், தத்துவம் இவற்றின் உள்ளார்ந்த மாறுபாடுகளை, கதைகளின் அமைப்பினுள்ளும் ஆழத்திலும் சம்பவங்களிலும் வெளிப்படுத்த தெமிர்ச்யன் முயன்றிருக்கிருர், 'தேவைக்கு அதிகமானது” என்பது இந்தவிதமான திகைப்பூட்டும் கதை தான். குற்றம் செய்யப்படுகிற நிகழ்வும், குற்றத்தை அறிந்து கொள்கிற போக்கும், உள இயல் ஆய்வும் தத்துவ சிந்தனையும் கலந்த ஒரு சூழ்நிலையில் இயங்குகின்றன. பல வருஷங்களுக்குப் பிறகு எழுதப்பட்ட அவரது 'மலர்களின் புத்தகம்' தத்துவ ரீதியில் செழுமையான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. ஆர்மேனிய மக்களின் நிலைபேற்றையும், உறுதியாய்த் தாங்கி நிற்கும் ஆற்றலையும் பற்றிய அசாதாரணக் கேள்விகளே அது எழுப்புகிறது. "பாதிரியார்', 'வயிறு’’ எனும் கதைகளில் சிந்திக்கவைக்கும் உளஇயல் சாயைகள் அடங்கியிருக்கின்றன. ஏ. இஸாகியன், டுமேனியன் போலவே, இலக்கியத்தின் ஜனரஞ்சகமான அடிப்படைகளின் துணையோடு, மக்களுக்குரிய வாழ்வின் பிம்பங்களை இலக்கியத்தில் கொண்டுவரும் விஷயத்தில் பெரும் சாதனை புரிந்திருக்கிருர். அதே வேளையில், வாழ்க்கையும்