பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 - ஆகஸ்ட் சில சமயம் கொட்டுப்பட்டால், அந்த உணர்வே தெரிவ தில்லை. ஆனாலும், இதைப்போல் இல்லை. உன்னல் கொடுக்கைப் பிடுங்க முடியவில்லை. உன் மருமகனே உனக்குப் பிடித்திருக் கிறதா?’’ 'அவன் சரியானவன்தான். நல்ல தொழிலாளி.’’ " உன் சின்னப் பெண்ணை எப்போது கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போகிருய்?’’ ஈக் கொடுக்கை மரியத்தால் பற்றி இழுக்க முடியவில்லை. மேலும், கயிறுகள் அவள் தோள்களைப் பின்னுக்கு இழுத்துத் தடை செய்தன. இந்நேரத்தில், ஆண்ட்ரோ அவள் முழங்கால்களின் மீது சாய்ந்துகொண்டான். அவனுடைய தடித்த கழுத்து குறுக்கே இருந்தது. மேலும், அவள் பாதத்தின் அடியில் மிகக் கடினமான எதுவோ-கட்டையோ சிறு கல்லோ, ஏதோ ஒன்றுதொல்லை கொடுத்தது. "என்ன மனிதன்!’ என்று மரியம் எரிச்சலோடு சொன்னாள். 'குறைந்தபட்சம் நீ அந்தக் கயிறுகளேயாவது எடுத்துவிட்டிருக்கலாம். அவள் சுமையிலிருந்து விடுபட்டு எழுந்து நின்ருள். ஒரு கொடிக் கம்பம்போல் நேராக, உலர்ந்து உறுதியாக நின்ருள். 'அவளுக்கு மாப்பிள்ளை காத்திருக்கிருன். இந்த வருஷம் அவள் ஒன்பதாம் வகுப்புத் தேறியதும் நான் கல்யாணத்தை முடித்துவைப்பேன்.’’ 'அதன் பிறகு நீ தன்னந்தனியாக இருப்பாய்.” 'நான் இப்போது தனியாக இல்லையா?” 'கவனி, பெண்ணே! நீ நல்லபடியாக இருக்கையில் நீயே ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ளக் கூடாது?’’ போ, என்னைப் பார்த்துச் சிரி.’’ ஆண்ட்ரோ கடைசிப் பலகையை உரிய இடத்தில் பொருத்தி ஆணி அறைந்தான். வண்டி செய்து முடித்த பிறகு, வண்டி யோட்டி தன்னைக் கடுமையாகச் சபிப்பான் என்று அவன் உணர்ந் தான். பின்புற ஒரம் மிகவும் அகலமாக இருந்தது. 'நீ ரொம்பவும் சூடாக இருக்கையில் சுற்றுப் பக்கத்தில் நிற்காதே’ என்று ஆண்ட்ரோ கூறினன். 'அதுவும் ஒரு வண்டி, நீயும் ஒரு தொழிலாளி!’’ "வாயாடாதே. உன் வைக்கோலை எடுத்துக்கொண்டு போய்த்தொலை.”