பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


________________

174 ஆகஸ்ட் சொல்லு, அது என்ன, என்னைக் கேள். தேனீக்கள் மொய்த்துக்கொண்டிருக்கின்றன. அதிகப் படியான கூடு எதுவும் இல்லை. உன்னிடம் ஒன்று இருக்கலாம். இல்லாவிட்டால், எனக்காக ஒன்று செய்து தா, உனக்கு அதிக நேரம் நேரம் பிடிக்காது. நாசமாய்ப்போகிற தேனீக்கள் என்னைப் பைத்தியமாக அடிக்கின்றன. ஆண்ட்ரோ உரக்கச் சொன்னான்: பல்லை எல்லாம் இழந்து விடும்படி உனக்கு அப்படி என்ன வயது ஆகிறது? " அறுபத்து ஏழு.'

    • நான் பந்தயம் கட்டுவேன். நீ என்னை ஏமாற்ற வேண்டிய தில்லை. நான் 2.பகாரச் சம்பளம் நிர்ணயிக்கும் குழுவைச் சேர்ந்தவனில்லை. ஆண்ட்ரோ வருத்தமுற்றவன் போல் பேசினான்.

மரியம் ஓசைப்படுத்தாமல் வீட்டிலிருந்து வெளியே வந்தாள். வாசல் ஓரத்தில் நின்றாள், அவர்கள் இருவரையும் வாயில்புறத்தில் அருகருகே பார்த்ததும், ஆண்ட்ரோவின் கறுத்த மீசையையும் இருதயத்தை யும் கருத்தில் கொண்டு, அவர்கள் வெகுகாலமாகத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் (தனியான ஒரு பெண் அது இல்லாமல் இருக்க முடியாது) என்று ஜிக்கோர் முடிவு செய்தான். சென்ற மாரிக்காலத்தில் அவள் வீட்டின் முன்புறம் இருந்த மரக் கட்டையை ஆண்ட்ரோதான் களவாடினான் என்று தீர்மானித் தான். அது நல்ல கட்டை. அதை அவனே எடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தான். அதற்குள் மற்றவர்கள் அவனை முந்திக்கொண்டார்கள். - -

    • நான் 1898-ல் பிறந்தேன். அங்கே இரண்டு வருஷம். இங்கே அறுபத்தைந்து. ஆக எனக்கு அறுபத்து ஏழு ஆகிறது. நீ குழந்தையாக இருந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது.

" நான் சும்மா பரிகாசம் பண்ணினேன். கோபப்படாதே.

  • நீ பரிகாசம் பண்ணாவிட்டாலும் நான் உன் பேரில் கோபம் கொள்ள எதுவுமில்லை.

மரியம் எதுவும் பேசாது ஆண்ட்ரோவைக் கடந்து சென்றாள். வைக்கோல் சுமை அருகே ஒரு கணம் நின்றாள். பிறகு கயிறு களின் ஊடே கைகளைப் புகுத்தினாள். குந்தினாள். மண்டியிட்டு, கைகளிலும் கால்களிலும் நின்று, பின் கைகளால் தரையை உந்தி எழுந்தாள்.