பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹ்ரான்ட் மாடவோசியன் i 77 "லெவான் மாமா!' என்ருள். அவள் மிகுந்த கூச்சமும் நாணமும் கொண்டாள். நகரத்தின் துப்புக்கெட்டவர்கள் போலவும், நாட்டுப்புறத்தின் உல்லாசிகள் போலவும் இல்லை அவள். தனது மிகச் சிறந்த பால்காரியான ஆஷ்கென் தன்னிடம் என்ன கேட்க விரும்பிளுள் என்று லெவான் யூகிக்கும் வரை அவள் காத்திருந்தாள்.

  • நீ சிறிது நேரம் விடுப்பில் போக விரும்புகிருயா?" ஆஷ்கென் தலையாட்டிஞள். சாயங்காலம் பால் கறக்கிற நேரத்துக்குள் திரும்பி விடுவதாக இருந்தால், நீ என்னைக் கேட்கவே வேண்டாம். இது உன் ஒய்வு நேரம். உன் இஷ்டம்போல் செய்.”

ஆளுல், முதலில் அனுமதி பெருமல் ஒரு அடிகூட எடுத்து வைக்காத ரகத்தைச் சேர்ந்தவள் ஆஷ்கென். அவள் அனைத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய இயல்பு உடையவள். பள்ளத்தாக்கில் பணிபுரிகிற தொழிலாளிகள் சிறிது தயிர் சாப்பிட விரும்புவார்கள் என அவள் அறிவாள். ஆஷ்கென் தாராளமானவள்; சிறிதுகூடக் கஞ்சத்தனம் இல்லாதவள். அவள் தனது சொந்தப் பசுவின் பாலிலிருந்து ஆக்கிய தயிரைக் கொண்டுபோவாள். ஆஷ்கென் முன்யோசனை உடையவள். சுமையின் கனத்தால் உடல் நன்கு குனிய அதை அவளே எடுத்துச்செல்வாள். தன்னை வருத்திக்கொள்ள அவள் ஒரு போதும் தயங்கமாட்டாள். ஆஷ்கென் துண் உணர்வு உடையவள். அவர்களைத் தனியே சாப்பிடும்படி விட்டுவிட்டு அவள் நகர்ந்துவிடுவாள். ஒரு புல்லைக் கிள்ளியபடி, கண்களைத் தாழ்த்தியவாறு, அடக்கத்தோடு, ஒதுங்கிக்கொள்வாள். பிறகு அவள் மரியத்துடன் நீரூற்றுக்குப் போவாள். அவர்கள் இருவரும் குழந்தைப் பருவத்திலிருந்தே சிநேகிதிகள். ஒருவரை ஒருவர் ஒரே பார்வையில் புரிந்துகொள்வார்கள். ஊற்றிலிருந்து தண்ணிர் எடுத்து வருவது ஒரு பெண்ணின் வேலை என்பதை அவர்கள் இருவரும் அறிவர். ஆஷ்கென் வாளியை ஒடும் நீரில் நன்முக அலம்பினள். அதைச் சாலே ஒரக்கால்வாய் அடியில் பதிவாக வைத்தாள். அது நிலையாகப் பதிந்திருக்கிறதா, கவிழ்ந்து விழுந்துவிடாதே என்று கவனமாகப் பார்த்தாள். மண்கட்டி எதுவும் வாளிக்குள் விழுந்து விடாதவாறு அவள் மரியத்தை ஒருபுறமாக இட்டுச்சென்ருள். அவளது தலைக்குட்டை கிழிந்துவிடாமல் இருப்பதற்காக அதை அகற்றிள்ை. அவள் தலைமுடி முழுவதையும் ஒரே அடியாகப் பற்றிள்ை. அப்போதுதான் கூந்தல் முடிச்சு சிறிதாக இல்லா <器一罩2