பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxi மரணமும், உயிர்வாழ்தலின் தன்மையும் அர்த்தமும் பற்றிய பல மானிடப் பிரச்சினைகளிலும் அவர் ஆர்வம்கொண்டிருக்கிரு.ர். அக் கேள்விகள் எல்லாம் அவருடைய அப்துல்லா மேரி” என்ற கவிதையிலும், இதர எண்ணற்ற செய்யுள்களிலும், உரைநடைப் படைப்புகளிலும், பேச்சுகளிலும் பூரணமாக உருப்பெற்றிருக் கின்றன. அவை விலித், கீழ்திசை தரிசனங்கள்’’ என்ற பெயரில் 1927-ல் புத்தக வடிவம் பெற்றன. இசைக் காவியக் கற்பனையான சாஅதியின் கடைசி வசந்தம்' அத் தொகுப்பி லிருந்து எடுக்கப்பட்டதுதான். இஸாகியன் வாழ்க்கையின் தத்துவதரிசி ஆவார். வாழ்வின் நிலையாமை, வாழ்க்கைமீது காதல், வசந்தம் மரணம் ஆகியவற்றின் விழிப்பு சம்பந்தமான நிரந்தர விஷயங்களை, சாஅதியின் வாழ்வை முன் மாதிரியாகக் கொண்டு அவர் எழுப்பியிருக்கிருர், "நாம் நமது விருப்பத்தின்படி பிறக்கவில்லை. ஆச்சர்யத்துடன் உயிர்வாழ்கிருேம். ஏக்கத்தோடு சாகிருேம்' என்று 'குலிஸ்தான் காவியத்தில் சாஅதி எழுதி யிருக்கிற வரிகளை அவர் விசேஷமாகப் பின்பற்றினர். பொதுவாக, கிழக்கத்திய உலகம், அதன் சித்திர விசித்திரங்கள், இதமான வர்ணவிஸ்தாரங்கள், அதன் தத்துவம், பேச்சுகள் ஆகியவை அவரை வலுவாக ஈர்த்தன. இவ்வித நோக்கங்கள் கொண்ட அவரது படைப்புகள் பலவற்றிலும், வாழ்வின் அர்த்தம் பற்றிய கேள்விகளை விவரித்து, இறுதியில் உயிர் வாழ்தல், மரணமடைதல் ஆகியவற்றின் மர்மத்தை இஸாகியன் அடைகிரு.ர். வி. டோடோவென்ட்ஸும், ஏ. பாகுன்ட்ஸும் ஆர்மேனிய உரைநடையின் தனித்தன்மை பெற்ற இரு பிரதிநிதிகள் ஆவர். அவர்களுடைய இலக்கிய முயற்சிகள் 1910கள், 1920களின் தீவிரமான இலக்கியத் தேடல்கள் மிகுந்த காலகட்டத்தோடு ஒத்துப்போகின்றன. வி. டோடோவென்ட்ஸின் படைப்பிலிருந்து தரப்பட்டுள்ள பகுதி அவரது 'ஒரு புராதன ரோமாபுரி ரஸ்தாவிலிருந்து' (1930) என்ற நாவலிலிருந்து எடுக்கப்பெற்றதாகும். சுயசரிதை ரீதியான இந்த நாவல் பலப்பல சிறு கதைகளையும் நெடுங் கதைகளையும் கொண்ட ஒரு வடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அவற்றில் அநேக சிறு கதைகளும் நெடுங்கதைகளும் பூரண உருவம் பெற்ற தனித்தனி படைப்புகள் போன்றே அமைந்திருக் கின்றன. பொதுவாக, இந்தச் சுயசரிதை நாவல் 1920கள், 1930களில் ஆர்மேனிய இலக்கியம் பெரும் அளவில் முன்னேற்றம் அடைவதற்கு உதவியது. ஜி. மஹாரி 'குழந்தைப் பருவம்' (1929), "முதிரா இளமை' (1930), பின்னர் இளமையின்