பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 80 கிளேபடர்ந்த வில்லோ மரமும் அசைந்தாடும் நாணலும் நேரம் சென்ற பிறகும் நீ வெளியே இருக்கக்கூடாது என்று உனக்குத் தெரியாதா? நீ வீணுக முரண்டுபண்ணுகிருய். திரும்பி வா வீட்டுக்கு வா...” ஹகும்...! வீட்டுக்கு வா”. அவன் அம்மா மாலை வேளையில் அப்படித்தான் கூப்பிடுவாள். அவன் அம்மா! மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் விளையாட்டில் ஈடு பட்டிருக்கும் நேரத்தில் அவள் அவனை அழைப்பது வழக்கம். புழுதி படிந்த கால் சட்டையைத் தட்டிவிட்டு, சட்டை நெகிழ்ந்து வெளியே தொங்கிவிடாமல் இருக்கவும்-மார்பில் மறைத் திருக்கும் பொன்னிற ஆப்பிள் பழங்கள் வெளியே விழுந்து தெருவில் உருண்டு பள்ளத்துள் பாயாமல் தடுக்கவும்-தனது இடுப்பு வாரை இறுக்கிக்கொண்டு, அந்தப் பையன் மன மில்லாமலே வீடு திரும்புவான். வீடு..? நெர்ஸஸ் மாஷனின் நெஞ்சு படபடத்தது. திடீரென அவனுடைய குழந்தைப் பருவ நினைவுகள் யதார்த்த நிலைமைக்கு வேறு பொருள் சேர்த்தன. ஆனல் சில கணங்களுக்கு மட்டுமே. ஆயினும், மதுரமான பசும் புல்வெளியின் ஒரத்தில் இருந்த சிவப்பு ஒட்டு வீட்டை நோக்கி வேகமாக நடக்கும்படி அவனைத் தூண்டுகிற அளவுக்கு அவை போதுமானதாக இருந்தன. பிற்பாடு, அந்த அழைப்பு இனிய பிரமைதான் என அவன் நிச்சயமாக உணர்ந்தான். அவன் முற்றத்துக் கதவை முழங்காலால் தள்ளித் திறந்தான். நின்று, சுற்றுமுற்றும் பார்த்தான். கடந்துபோன வருஷங்களின் அடியில் அவனது குழந்தைப்பிராயம் நழுவிச் சென்றது. அவன் தன் தாயின் குரலே தூரத்தில் அமைதிப் படுத்தினன். பொன்னிற ஆப்பிள் பழங்கள் தெருவில் உருண்டோடி, புழுதியில் மறைந்துபோயின. அக் கணத்தில் எது நிஜம் என்று புரிந்துகொள்ள நெர்ஸஸ் மாஷன் முயன்ருன். நிச்சயமாக ஏதோ இருந்தது! எதுவோ நிலைபெற்றிருந்தது! வீடு? ஹஅம். மறுபடியும் வீடு! . வழக்கமாக மனிதன் தன் சொந்த வீட்டில் பாதுகாப்பை உணர்கிருன். அவனது சொந்தக் கூரையின் கீழே மனிதன் அவனுக இருக்கிருன், சுதந்திரமாக ஆல்ை இந்த நேர்த்தி யான, சுத்தமான, ஒட்டு வீட்டில் அப்படி இல்லை. கவலைகளே எழுப்பக்கூடிய அசாதாரண ஆற்றல் அதற்கு இருந்தது.