பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覆&别 கிளைபடர்ந்த வில்லோ மரமும் அசைந்தாடும் நாணலும் நான் தனியாக இருக்கிறேன் என்று அவன் நினைத்தான். நான் தனியாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறேன். எதிர் பாராத விருந்தாளிகள் யாரும் இல்லை. இன்று பயமும் அதிகக் கர்வம் உள்ளதாகத் தோன்றவில்லை. இன்று நான் பயப்படுவ தற்குக் காரணமே இல்லை. ஏனெனில், நான் எனது நாட்டை நினைவுகூர்ந்தேன். பொன்னிற ஆப்பிள்களையும் என் அம்மா வின் அழைப்பையும் எண்ணிக்கொண்டேன். இப்போது நான் ஆடைகளை அகற்றிவிட்டு ஷவரில் குளிக்கப் போகிறேன். விழுகிற நீர்ச் சிதறல்கள், ஊசிகள்போல், என் உடலில் குத்தும். பகலில் என் தேகத்தில் படிந்திருக்கக்கூடிய நட்சத்திரத் தூசியைக் கழுவிவிடும். 'நீ குழம்பியிருக்கிருயா?’ என்று வீடு வருத்தமாய்க் கேட்டது. தன் இதயம் வேகமாய் அடித்துக்கொள்வதை நெர்ஸஸ் மாஷன் உணர்ந்தான். முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு விரல் இடுக்குகளின் வழியாக அவன் பார்த்தான். அவன் தனியாக இருந்தான். சந்தேகம் இல்லாமல், தனிதான், 'நீ களைத்திருக்கிருய். பசியாக இருக்கிருய். குளித்து முடி. அப்புறம் நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்” என வீடு தொடர்ந்து கூறியது. நீ என்ன செய்யக்கூடும்? பொதுவாக, நீ ஏன் உபசாரமாக இருக்கிருய்? இறுதியாக, நான் களைத்தும் பசியோடும் இருந் தாலோ இல்லாமலிருந்தாலோ உனக்கு என்ன கவலை? உனது சுவர்களின் மேல்கூரையைத் தாங்கியிருப்பது, நான் பாதுகாப் பாக உணரும் விதத்தில் அதை உறுதியாய்த் தாங்கி நிற்பது தான் உன் வேலை. ...நெர்ஸஸ் மாஷன் தனது சட்டைப் பித்தானை அவிழ்த் தான். நடந்தபோதே பாதங்களைக் குலுக்கினன். காலணிகள் அங்கும் இங்குமாகப் பறந்தன. நட்சத்திரத் துTசி படிந்த தன் சட்டையை, அதன் கைகளைப் பிடித்தபடி, தனது முன் கையைச் சுற்றி முதலில் மெதுவாகவும் பிறகு வெறித்தனமாகவும் முறுக்கினன். அவன் குளிப்பதற்கு விரைந்தான். யாருக்குத் தெரியும்? அவன் தன்னுடைய மிகப் புனிதமான பாடலையும் பாடலாம். 'நன்மாலை!’ இல்லை, அது வீடு இல்லை. நெர்ஸஸ் மாஷனை வழக்கமாக நடு அறையில் சந்திக்கும் ஷாவாஸ்ப்பும் இல்லை. விசேஷமாக அவன் ஸ்டேஷனில் கடமை