பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே, சிமோனியன் } 83 யாற்றும்போது சந்திப்பான். ஷாவாஸ்ப்பின் வருகைகள் அறிவுக்கு எட்டாதவையாக இருந்தன. அவற்றின் தலையையோ வாலேயோ கண்டுகொள்ளக்கூடியவர் அநேகமாக எவரும் இரார். பார்க்கப்போனல், தானே இதுவரை ஏன் அவனைக் கேட்டறியவில்லை என்று நெர்லஸ் மாஷனுக்குப் புரியவில்லை. அவன் சில சமயங்களில் கேட்க விரும்பினன் என்பது சரிதான். ஆனல் திடீரென்று அவன் மனம் வேறெங்காவது திரும்பிவிடும், கேட்கிற விஷயம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும். அது புல்வெளியின் எதிர்முனையில் ஷாவாஸ்ப்பின் வீட்டுக்கு எதிர்வீட்டில் வசித்த ஆர்னக்கும் இல்லை. "நல்ல மாலை, நெர்ஸஸ் மாஷாணி!' என் தொலைதுார அற்புத நாட்டின் பேராலும், அவர்களே பாதுகாக்கிற நாட்டுக்குத் தங்களை ஈடுவைத்துள்ள என் மூதாதைகளின் ஞாபகச் சின்னங்கள் பேராலும்-அவர்கள் கூப்பிடுகிரு.ர்கள், உயிரோடிருக்கும் சந்ததிகளை அவர்கள் ஒருங்கு தி ர ட் டு கி ரு ர் க ள் - புனித மான அனைத்தின் பேராலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன்: அது மோரிக்கும் இல்லை. 'உனக்கு என்ன வேண்டும்?' என்று நெர்லஸ் உரத்த குரலில் கேட்டான். தலையைச் சுற்றித் துண்டைக் கட்டியிருந்த அவன் அந்தப் பெண்ணைக் கேட்டான். லேசான, ஆகாயக் குட்டையைத் தோள்கள் மீது தொய்வாகத் தரித்திருந்த அவள், நெருக்கமான நட்புடனும், குறிப்பாக தயக்கம் எதுவும் இல்லா மலும், அவ் வேளையின் நுண்மையான நிலைமையைச் சிறிதுகூடப் பொருட்படுத்தாமலும் சிரித்தாள். நீயும் எங்கள் புல்வெளி யில்தான் குடியிருக்கிருயா?’ என்று நெர்ஸஸ் மாஷன் கேட்டான். அது எவ்வளவு அபத்தமான கேள்வி என்று அவன் சந்தேகிக்கக்கூட இல்லை. ஏனெனில், மதுரமான பசும் புல் வெளியில் இருந்த குடிசைகளில் வசித்தவர்கள் இவர்கள் மட்டுமே : அவன், ஆர்னக், ஷாவாஸ்ப், மற்றும் மோரிக். நீ யார்?’’ தன் குரல் தனக்கே அடையாளம் காண இயலாத தாகவும் விசித்திரமாகவும் மாறியதை அவன் உணர்ந்தான். "நீ யார் என்று கேட்கிறேன். ஏன் இங்கு வந்தாய்? என் வீட்டில் உனக்கு என்ன வேலை?’’ அதே சமயம், வீட்டின் மகிழ்ச்சியையும் அவன் உணர்ந் தான். நெர்ஸஸ் மாஷன் என் வீடு' என்று சொன்னதைக் கேட்டு அந்த வீடு மகிழ்ந்தது. நம் எல்லோரையும் போலவே, அந்தப் புல்வெளி வீடும்-அதை யார் கட்டியது, அது கட்டப் பட்டதுதான அல்லது சிருஷ்டிக்கப்பட்டதா? என்று எவருக்கும்