பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. சிமோனியன் 187 தனியாக இருக்க இயலும்? நம்மோடு நாம் மட்டுமே இருந்து, ஒரே ஆத்மாவாய், ஒரே உடலாய், முதலும் முடிவுமாய் ஆவது எப்படிச் சாத்தியம்? நான் மறதியில் ஆழ்ந்தேன். நீலப் பனிமூட்டங்களுடு பறந்தேன். வெண்மையான சூரியனின் கதிர்களுக்கு இலக்காகி, வெப்பமான பாலே நிலங்கள் வழியே நடந்தேன். ...ஆனல் உனது காதலின் கட்டற்ற கூச்சல் ஏன் பிறந்த தில்லை? . அந்த மகோன்னத வேளையில், பனிப்படலம் திரித் திரியாய்க் கிழிபட்டிருக்கலாம்; மறதி அதித்தியமான ஆனந்தம் வழங்கியிருக்கலாம்; எனது பிரமைகள் வடிவம் பெற்று எங்களுக்கு ஆறுதல் தந்து இருக்கலாம். 'நல்லது!’ என வீடு நெடுமூச்சு உயிர்த்தது. "அப்படி யாளுல், உன்னை உனக்கே வைத்துக்கொள். நீயே சுதந்திரமாக உணர்ந்திரு, நெர்ஸஸ் மாஷன்” என்று வீடு விசனத்தோடு கூறியது. 'நான் நிகழ்காலத்தில் கூரையை என் சுவர்கள்மேல் தாங்கி, அதை உறுதியாய்க் காப்பேன்.” நல்லது, சரியே! இப்போது. இப்போது நான் விழிப்படை வேன். என் கண்கள் மூடியிருக்கின்றன. அதனுல் நான் தூங்கு கிறேன் என்று ஆகாது. இதோ நான் விழித்துக்கொள்கிறேன். நான் உலகத்தையும் என்னையும் உணர்கிறேன். நான் அதிசய மான இரக்கத்தையும், வெகு இனிமையான தூய துக்கத்தையும் அனுபவிக்கிறேன். ஏனெனில், எங்கிருந்து ஏன் வந்தாள் என எவரும் அறியாத பெண்ணே நான் நினைக்கிறேன். அவள் பெயர்..? அவள் பெயர் என்ன? அவள் இப்போது சமையல் அறையில் இருக்கலாம். ...நெர்ஸஸ் மாஷன் வீட்டைச் சுற்றி வருவதற்காக எழுந் தான். அவன் தேடிக்கொண்டிருந்தான். யாரை? ைஇல்லே. சமையல் அறையில் ஒருவரும் இல்லை. முன் அறையில் இருந்த கடியாரத்தின் ஊசல் சுறுசுறுப்பாக அப்படியும் இப்படியும் ஆடிக்கொண்டிருந்தது. அவனது வெறும் கால்களின்கீழ் பாய் சரசரத்தது. பயம் மீண்டும் அவனுள் புகுந்து, இரக்கத்துக்கும் துக்கத்துக்கும், ஏக்கத்துக்கும், கவலைக்கும் இடம் விட்டு வைக்கா மல் அவளுேடு கலந்துவிட முயன்றது. பயம் மறுபடியும் கர்வம் கொள்ள முயலுமானல், எனக்காக நடு அறையில் என்ன புதிய ஆச்சர்யம் காத்திருக்கிறது என்று பார்க்கலாமே என நெர்ஸஸ் மாஷன் நினைத்தான்.