பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼8密 கிளைபடர்ந்த வில்லோ மரமும் அசைந்தாடும் நாணலும் மோரிக்...? ஷாவாஸ்ப்...? அந்தப் பெயர்கள் உச்சரிக்கப் பட்டு, அறையை நிரப்ப விரும்பவில்லை என்று அவன் உணர்ந் தான். அவை அவனே மூச்சடைக்கப் பண்ணுவதற்காக அவன் தொண்டையிலேயே நின்றன. அவன் நோய்வசப்படுவதை உணர்ந்தான். வாசல் சட்டத்தின் மீது சாய்ந்தான். பலமிழந்து முழங்கால்கள் மடங்குமானல், அவன் அமைதியாக வழுக்கிக் கீழே அமர்ந்து, கால்களைப் பரப்பிக்கொண்டு தரையில் உட்கார வசதியாக இருக்கும். மேஜை முன் அமர்ந்து, முந்திய நாள் இரவுச் சாப்பாட்டில் எஞ்சியிருந்ததை அவசரம் இல்லாமல் தின்றுகொண்டிருந்தவன் ஆர்னக் அல்ல. அவனே தான். நெர்ஸஸ் மாஷன் ஆகிய தானேதான். ஆகவே நான் என்னேடேயே இருக்கிறேன் என்று அவன் எண்ணினன். நான் விரும்பினல், தொலை தூரத்தில் விடப் பட்டுள்ள எனது நாட்டை நினைத்து ஏங்கி நான் துயரப்படலாம். நான் விரும்பினல், எனது கிளைபடர்ந்த வில்லோ மரத்தையும் அசைந்தாடும் நாணலையும் வைத்திருக்கலாம். நான் விரும்பினல். நடு அறையில் மேஜை முன் தானக இருந்த அவன் சட் டென்று தலையை வாசல் பக்கம் திருப்பினன். இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டான். விரல் இடுக்குகள் வழியே பார்த்தான், பார்த்துக்கொண்டே இருந்தான். மேலும் مهم فtللهيماق) நெர்ஸஸ் மாஷன் எச்சரிக்கையோடு கதவை மூடினன். நாம் எல்லோரும் எதையாவது விரும்புகிருேம். அடைத்த கதவின்மேல் தன் தோளைச் சாய்த்தவாறு அவன் எண்ணினன். மிகச் சிறிய விஷயம். தொலை தூரத்தில் விடப்பட்டுள்ள நமது பூர்வீக நாட்டில் அதை அடைவது சாத்தியமாகலாம்; அவை இருக்குமானல்... கிளைபடர்ந்த வில்லோ மரமும் ஆடி அசையும் நாணலும் இப்பவும் நீடித்திருந்தால்; அவை உயிரோடு இருக்கு மாளுல்! - ...இரக்கமும் துக்கமும் கனத்துப் பெருகின. எனது ஆசை ஒரு புனித இசையாக மாறிக்கொண்டிருக்கிறது. எங்கிருந்து ஏன் வந்தாள் என்று எவரும் அறியாத அந்தப் பெண் ஜாக் கிரதையோடு சேகரித்த எனது கவலைகள் மீண்டும் என்னைக் கவிந்து சூழ்கின்றன.