பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. செய்துன்சியன் 夏姆、 'நான் சாக விரும்பவில்லை. பயந்த குரல் மறுபடியும் * கேட்டது. மனிதர்கள் மெதுவாக எண்ணிக்கொண்டிருந் தார்கள். . 'இருபத்தாறு...' 'இருபத்தேழு...”* 'இருபத்தெட்டு...' 'இருபத்தொன்பது...”* இருபத்தொன்பது சிரித்தான். அவன் வாழ்நாள் முழுவதும் கடவுள் நம்பிக்கை உடைய வகை இருந்தான். அவன் எப்போதும் தனது ஜபங்களைச் சொன்னன். ஞாயிறுதோறும் பிள்ளைகளைத் தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றன். அவர்கள் ஜபங்களை மனனம் பண்ணும்படி செய்தான். குழந்தைகளைத் திருப்திப்படுத்த அவன் அவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் வாங்கித் தருவது வழக்கம். அவனும் அவன் மனைவியும் முதல் முறை ஆலயத்தில்தான் சந்தித்தார்கள்: கிறிஸ்துவின் படத்துக்குக் கீழே தான் ஒருவரை ஒருவர் கண்டு புன்முறுவல் பூத்தார்கள், பிறகு ஒருநாள் அவர்கள் கைகளைப் பற்றிக்கொண்டார்கள்; முத்தமிட்டார்கள். கிறிஸ்துநாதர் பார்த்ததாகவும் புன்னகை புரிந்ததாகவும் அவர்களுக்குத் தோன்றியது. அதனால்தான் அவன் பங்கிற்கு இருபத்தொன்பது வந்திருக்கிறது. ஆரம்பம் முதலே அவன் நிச்சயமாக அறிந்திருந் தான். அதை அவன் மனப்பூர்வமாக நம்பினன். அதஞல் ஆனந்தத்தோடு கூச்சலிட விரும்பினன்.

  • சகோதரர்களே, அவரை நம்புங்கள், அவர் உங்களைக் காப்பாற்றுவார்!’’

ஆனல், கடவுளால் செய்யப்படுகிற நன்மை அதிகம் தோன்றவில்லை. ஏனெனில், இப்போது மிகச் சிலரே கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆகையால் அதிகமாகக் கேட்க அவனுக்கு உரிமை உண்டு... நான் யுத்தத்திலிருந்து சுகமாகவும் ஆரோக்கியமாகவும் வீடு திரும்ப வேண்டும்... திரும்பிப் போனதும் நல்ல வேலை ஒன்றை நான் தேடிக்கொள் வேன். பணக்காரன் ஆவேன். வயது முதிர்ந்த பின் சாவேன்... மிகப் பல வெள்ளைத் தாள்கள் அடைவேன்... அவை அனைத் துக்கும் பிரதியாக நான் உன்னை நம்புவேன். உன்னைப் பிரார்த் திப்பேன். இதோ எனக்கு நானே சிலுவைக்குறி இடுகிறேன்... தந்தை, திருக்குமாரன், பரிசுத்த ஆவி பெயரால்... நினைவு வை, நினைவு வை. இப்போது மிகச் சொற்பமானவர்களே உன்னை நம்புகிருர்கள். ஆமென்... ஆ-13