பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩94 ஒவ்வொரு பத்திலும் ஒருவர் 'முப்பத்தாறு...” 'முப்பத்தேழு.’’ 'முப்பத்தெட்டு...' 'முப்பத்தொன்பது...' தான் நாற்பதைவிட ஒன்று குறைவாக இருந்ததால் முப்பத் தொன்பது அமைதி இழந்து தவித்தான். நாற்பதாவது அவனுடைய நெருங்கிய நண்பன். அவர்கள் சேர்ந்தே பள்ளிக் கூடம் போளுர்கள்! சேர்ந்து போரிட்டார்கள், சேர்ந்து கஷ்டப் பட்டார்கள். இப்போதுகூட அவர்கள் அணிவகுப்பில் சேர்ந்து அருகருகே நின்ருர்கள். அவர்கள் நண்பர்களாக இல்லாதிருந் தால் வரிசையில் சேர்ந்து நின்றிருக்கமாட்டார்கள்: ஒருவேளை அவன் நண்பன் நாற்பதாவது நபராக வராதிருந்திருக்கலாம். அவன் அவர்கள் நட்பை எண்ணிக் குழப்பம் அடைந்தான். அவன் செய்த உதவிகள் எல்லாம் உள்நோக்கம் கொண்டு செய்த தாகவே இப்போது அவனுக்குத் தோன்றியது. அவன் தன் நண்பன்மீது பொழிந்த கருணைச் செயல்கள், முன்யோசனை அனைத்துக்காகவும் வெட்கப்பட்டான். திடீரென்று அவன் சந்தோஷத்தால் சிரித்தான். அதனல் அமைதியாக மூச்சுவிட்டான். அவன் தனது நியாயத்தைக் கண்டுகொண்டான். ஒருவரும் அவனைக் குறைகூற முடியாது. ஒருமுறை தான் மோசமாக நடந்ததை அவன் நினைத்தான் .. அவன் தன் நண்பனுக்கு உண்மையானவளுகவே இருந்தான். ஒருமுறை, வேலை இல்லாதிருந்தபோது, ஒரு இடத்தில் வேலை காலி என்று அவன் கேள்வியுற்ருன். அதை நண்பனிடம் சொல்லவில்லை. அவன் மட்டும் போனன். ஆனல் பிற்பாடு அவன் அதற்காக வருந்தின்ை; தனது செயலுக்காக வெட்கப் பட்டான். அதை நினைத்ததும் ஒருகணம் அவன் கலவரம் அடைந்தான். அவன் திரும்பவும் நல்ல நண்பன் ஆகிவிட்டான். அவன் சும்மா தன் வாழ்வில் ஒரே ஒரு தவறு செய்த மனிதன். மிகுந்த பிரயாசையோடு அவன் அந்த எண்ணத்தை மறுத்து ஒதுக்கினன். அதெல்லாம் முக்கியமற்றவை எனக் கருதினன். முக்கியம் என்னவென்ருல், அவன் அதைச் செய்திருந்தான். இங்கே கூடி நிற்கும் மனிதர்கள் அதை அறிய நேர்ந்தால், அவன் ஒரு அயோக்கியன் என்றே சொல்லுவார்கள். அவன் மீண்டும் அமைதி அடைந்தான். அவன் ஒரு கெட்ட நண்பனுக, மோசமான மனிதனாக இருந்திருக்கிருன். பயங்கரமான குழப்பத்திடையே அதுதான் மாபெரும் நியாயமாயிற்று.