பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 ஒவ்வொரு பத்திலும் ஒருவர் 'ஐம்பத்தெட்டு.” 'ஐம்பத்தொன்பது.”

  • நான் சாக விரும்பவில்லை... நான் கட்டாயப்படுத்தப் பட்டேன்...' அறுபதாவது நபரின் பழக்கமான, நரம்புத் தளர்ச்சி உற்ற குரல் கேட்டது. அவனிடம் யாரும் இரக்கம் கொள்ள வில்லை. -

அவர்கள் எழுபதாவது நபரிடம் இரக்கம் காட்டினர்கள். அதுவும் ஒரு விஷயத்துக்காகத்தான் பத்தாவது, இருபதாவது, முப்பதாவது, அவர்கள் எல்லோருமே, தாங்கள் எண்ணப்படுகிற வரையில், நாம் சாகமாட்டோம் என்றே நம்பியிருந்தார்கள்: ஒவ்வொரு பத்தில் ஒருவராக அவர்கள் இருக்கமாட்டார்கள் என்று நம்பினர்கள். ஆனால், எழுபதாவது, அந்தக் கடைசிப் போர்வீரன் நெடுநேரமாக அதை நன்கு அறிந்திருந்தான்.