பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiii துயரங்களையும் வெளியிடுவதற்கு துண்மையான, கவிதை நடை பயன்பட்டிருக்கிறது. பாகுன்ட்ஸின் க ைத க ள் மலையின் நீரூற்றுகள் போல் தெளிவாகவும், உள்விஷயங்களை நன்கு புலப்படுத்துவனவாகவும் இருக்கின்றன: மலேயக மக்களின் சுபாவம் போல் எளிமையாகவும் சாதாரணமாகவும் தோன்று கின்றன. ஆனால், உள இயல் நோக்கில் அவை ஆழமானவை; நாடகப் பாங்கானவை. இந்த எழுத்தாளர் அவற்றை அனுபவ பூர்வமாகக் கண்டு அறிந்திருப்பதே அதற்குக் காரணம் ஆகும். மனிதனை இயற்கையின் உறவினகைச் சித்திரிக்கும் எண்ணற்ற கதைகளை வி. அனன்யனும் எழுதியிருக்கிருர், வேட்டை விஷயங்களைப் பொருளாகக்கொண்ட பலப்பல கதைகளை அவர் வெளியிட்டிருக்கிருர். ஆர்மேனியாவைச் சேர்ந்த தாவரவர்க்கம், மிருக இனங்கள் பற்றிய ஜனரஞ்சகமான விஞ்ஞான நூல்களையும் அவர் எழுதியிருக்கிருர். அவருடைய ஹோவஸ்ாட்ஸோரின் அடிமைகள்', 'லெவாணி-ஆபின்’ (ஸ்ெவான் ஏரிக்கரை மீது) என்ற நாவல்களும், மற்றும் அநேக படைப்புகளும் உலகத்தின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவரது எளிய நடை அவருடைய எழுத்துகளுக்கு ஒரு கவர்ச்சி அளிக்கிறது. மனிதனை இயற்கையின் உறவினகை நோக்குவதும், இயற்கை யோடு அனுபவங்கள் பெறுவதன் வாயிலாக மனிதன் வளர்ச்சி அடைவதைக் காட்டுவதும் அவர் எழுத்துகளில் காணப்படுகிற மிக முக்கியமான அம்சம் ஆகும். யுத்தத்திற்குப் பிந்திய வ ரு ஷங்க ளில், உரைநடை எழுத்தாளர்களின் ஒரு புதிய தலைமுறை இலக்கிய உலகில் பிரவேசித்தது. அவர்களில் சிலரது படைப்புகள்-ஸ்ெரோ கான் ஸாடியன், விஜென்கெச்சூமியன், மெகர்டிச் ஸார்கிஸ்யன், ராபேல் ஆராம்யன், அபிக் அவாகியன்-படைப்புகள் இத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. - தற்கால ஆர்மேனிய உரைநடை இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் எஸ். கான்ஸ்ாடியனும் ஒருவர். ஆர்மேனிய வாழ்வைச் சித்திரிக்கும் அவரது வரலாற்று நவீனங்களும், யுத்தகால மற்றும் யுத்தத்திற்குப் பிந்திய க்ால நாவல்களும் வாசகர்களால் ஆர்வத்தோடு வரவேற்கப்பட்டுள்ளன. பெரிய பெரிய படைப்புகளோடு, இன்றைய வாழ்க்கையைக் கலை உணர்வோடு சித்திரிக்கும் குறிப்பிடத் தகுந்த சிறு கதைகளையும் அவர் நிறையவே எழுதியிருக்கிருர். 'வெள்ளே ஆட்டுக்குட்டி’ என்ற கதையில் ஒரு ஆழ்ந்த சோகம் கலந்திருக்கிறது தூரத்து மலைக்கிராமம் ஒன்றில் தன்னந்தனியணுக வசிக்கும் நவஸார்த், பத்து வருஷ காலமாகத் தன் சகோதரன் மகன் வருகையை