பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள் வாக்தாங் அனன்யன் (1905– J போகோஸ்.கிலிஸா என்ற கிராமத்தில், விவசாயக் குடும்பம் ஒன்றில் அனன்யன் பிறந்தார். கிராமப் பள்ளியில் கற்றுத் தேர்ந்தபின், 1915-ல் திலித்ஸான்ஸ் வட்டாரப்பள்ளியில் சேர்ந்தார். அவர் எழுதிய ஒரு கட்டுரை ராஜத்துரோகமானது என்று பரிசோதகர்கள் குற்றம் சாட்டியதால் அவர் ஜிம்னஸி யத்தில் சேர்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கட்டுரை பின்னர் நொண்டிடாக்கோ’’ என்ற தலைப்பில் பிரசுரம் பெற்றது. அவரது முக்கியப் படைப்புகள் : வயலட் சிகரங்கள் மீது’, 'குகை மனிதர்கள்’’ வேட்டையின்போது’’ (சிறுகதைத் தொகுப்புகள்). 'நரக வாசலின் மர்மம்' (வீரசாகசக் கதை). இதர நூல்கள் : போருக்குப் பின்', 'வேட்டைக்காரன் கதைகள்’’, 'பண்ணையின் மக்கள்’’, '.ெ ஸ் வான் ஏரிக்கரையில்’’, சிறுத்தை கார்ஜின் கைதிகள்', 'ஆர்மேனியாவின் மிருக உலகம்’ (5 பாகங்கள்). லெரோ கான்ஸ்ாடியன் (1915– J கான்ஸ்ாடியன் கோரிஸ் நகரில் பிறந்தார். கோரிஸ் நகரின் செகண்டரி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் கற்று, 1934-ல் தேர்ச்சி பெற்ருர். பின்னர் பாகு நகரில் உள்ள ஆசிரியர் கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் பயின்ருர், அவரது முக்கியப் படைப்புகள் : "நமது படையின் மக்கள்', 'நிலம்”, “காட்லாரன், 'மிடார் ஸ்பாராபெட்’, 'பழங்காலம்பற்றிய புத்தகம்’ (நாவல்கள்), 'சிகப்பு லில்லிப் பூக்கள்' (சிறுகதை, குறுநாவல் தொகுதி).