பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள் 205 அகாசி ஜவாசியன் { 1925– } ஐவாசியன் (ஜியார்ஜியன் சோவியத் குடியரசைச் சேர்ந்த) அபாஸ்துமன் நகரில் பிறந்தார். தியிலிளி கலைக்கழகத்திலும், தியிலிஸி யுனிவர்சிட்டியின் மொழி இயல் பகுதியிலும் கல்வி கற்ருர். முக்கியப் படைப்புகள் : 'மழை', 'குடும்பத்தின் தந்தை', 'பிரதான நிகழ்ச்சி’, "லெய்னியர் மார்டிரோசின் வீரச் செயல்கள்’ (சிறுகதைத் தொகுப்புகள்), 'ஆர்மென் பிலிம்’ ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட ""முக்கோணம்’, "ஹாடபல்லா', "தந்தை', 'பாக்தலார் கல்யாணம் செய்துகொள்ளப்போகிருன்’ ஆகிய திரைப்படங் களுக்கான கதை வசனமும் அவர் எழுதியிருக்கிருர், வார்த்ஜெஸ் பெத்ரோசியன் (1932– X பெத்ரோசியன் ஆஷ்தாரக் நகரில் பிறந்தார். 1954-ல் ஏரெவான் அரசு யுனிவர்சிட்டியின் மொழி இயல் பகுதியில் பத்திரிகையாளர் பிரிவில் கற்றுத் தேர்ந்தார். முக்கியப் படைப்புகள் : 'ஒரு மனிதனைப்பற்றிய சிறு பாட்டு’’ (பாடல் தொகுப்பு). 'கடைசி இரவு', 'முடிவு பெருத சித்திரங்கள்', 'நகரின் பாதி திறந்த சன்னல்கள்', 'ஆர்மேனியன் சித்திரங்கள்’, ‘வாழ்ந்த வருஷங்களும் வாழாத வருஷங்களும்’, 'குழந்தைப் பருவத்தின் பாதையோர நிலையங்களிலிருந்து எழுதிய கடிதங்கள்', 'எவருக் கும் சொந்தமான மருந்துச்சாலை', 'அளவில்லாத அளவுகளின் சமநிலை’ (கதைகள், சிறுகதைகள் கொண்ட தொகுப்புகள்). அவருடைய வெளியே புறப்படுதல்’ என்ற கதையைத் தழுவி கல் கிலோமீட்டர்கள்’’ எனும் திரைப்படம் மாஸ்கோ பிலிம் ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டது, ஹிப்போகிரட்டின் இந்தக் கனமான தொப்பி’ என்ற அவரது நாடகம் ஏரெவான் அகாடமிக் தியேட்டரால் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. -