பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧV வாழ்க்கையின் அடிப்படையாக அமைகின்ற வலிமை மிக்க ஆதார சக்திகளின் அலைவீச்சை அவர் சுட்டிக்காட்டுகிருர், யுத்தத்திற்கு பிற்பட்ட ஆர்மேனிய உரைநடையின் தேசிய வளத்துக்குத் தனது பங்கை ஏ. அவாகியனும் செலுத்தியிருக் கிறார். அவர் சிறுபிராயத்தையும் இளமைக்காலத்தையும் ஈரானில் கழித்தார். ஆர்மேனியர் பலர் குடியேறி வசித்த நாடு gi[ • எனவே, தெற்கத்திய சித்திரங்களையும் வாழ்க்கை#3ے முறைகளையும் அவர் கிரகித்துக்கொள்வது சாத்தியமாயிற்று. 1946-ல் சோவியத் ஆர்மேனியாவுக்கு வந்து சேர்ந்ததும், அவர் தீவிரமான இலக்கியப் பணியில் ஈடுபட்டார். வெம்மையான தெற்கத்திச் சூரியனின் வர்ண விஸ் தாரங்கள் நிறைந்த, மனித உளஇயலின் புதிய, சுவாரஸ்யமான தன்மைகளைச் சித்திரித்த அவருடைய கதைகள் ஒன்றன் பின் ஒன்ரு கப் பிரசுரம் பெற்றன. அவருடைய சமீப காலப் புத்தகங்களில் ஒன்று அவர் தன்மையை எடுத்துக்காட்டும் விதத்தில் 'தென்பிராந்திய ஜுரம்’ (1971) என்ற தலைப்பைப் பெற்றிருக்கிறது. 'ஏக்கம்’ எனும் கதை அதில் இடம் பெற்றுள்ளது. பொதுப்படையான ஒரு சக்தி அந்தக் கதையில் கலந்திருக்கிறது. 1915-ல் ஆர்மேனியர்கள் மீது சுமத்தப்பட்ட மாபெரும் துயரத்துக்குப் பின்னர் உலகெங்கணும் சிதறுண்ட ஆர்மேனிய மக்களின் சந்ததிகளது ஏக்கத்தை இந்தக் கதை விவரிக்கிறது. ஈரானில் புழுதி நிறைந்த, முக்கியமில்லாத நகரமாக தேஸ்புல்லில் வசிக்கும் ஒரே ஒரு ஆர்மேனியன் கிரிகோர் மானுகியன் என்ற குணசித்திரத்தைப் படைத்து ஏ. அவாகியன் அந்த விஷயத்துக்கு ஒரு உருவம் தந்திருக்கிருர், உரைநடை எழுத்தாளர்களின் ஒரு புதிய தலைமுறையினர் 1960களில் இலக்கிய உலகத்தில் பிரவேசித்தனர். அவர்களுடைய பிரதிநிதிகள் தற்காலக் கலாரீதியான வாழ்வை ஏற்றுக் கொள்ளும் வகையில் இன்று முக்கியமான பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தத் தலைமுறையின் பிரதிநிதிகளான வார்த்ஜெஸ் பெட்ரோசியன், ஹ்ரான்ட் மாடவோசியன், லோரெய்ர் காலாயன், மூஷெக் கால்ஷோயன், பெர்ச் செய்துன்சியன், அகாசி ஐவாஸியன், கர்ரென் சிமோனியன், ஹோவன்னஸ் மெல்கோனியன், ரூ ப ன் ஹோ வி பி ய ன் ஆகியோர்-இவர்களில் சிலரது கதைகள் இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன-ஆர்மேனிய உரைநடையின் புதிய கட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிருர்கள். தற்காலத் தன்மைக்கு முக்கியமான விஷயங்களை நோக்குதல், இன்றைய மனிதனின் அறநெறி மற்றும் உள இயல் பண்பை சிருஷ்டித்தல்