பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvi ஆகிய தன்மைகள், வெவ்வேறு விதமான ೩೧ಕ್ಹಹಹಹ್ನಿಲ್ಟಕ எழுத்து நடைகளேயும் எடுத்தாள்கிற இப் படைப்பாளிகளே ஒருங்கிணைக்கின்றன. வாழ்வின் புத்தம் புதிய நிலைமைகளில் செயல்புரிகிற பாத்திரங்களையும், அந்த நிலைகளில் త్రిమిత్అబ్జా-t ಆಗನ್ತ சத்தை வெளிப்படுத்தலையும் வி. பெத்ரோசியன் இலக்கியத்தில் அறிமுகப்படுத்தினர். 'வாழ்ந்த வருஷங்களும் வாழாத வருஷங்களும்’ என்ற, கூரிய மனஇயல் ஆயவு முறையில் எழுதப்பட்டிருக்கும் அவருடைய நாவலும, ಡಿ.೨ಲಕಿ சித்திரங்கள்’ எனும் கட்டுரையும் இந் Tಹದ್ದಿಮೆ தனித்து நிற்கின்றன. இன்றைய ஆர்மேனியாவும், ஆர்மேனிய மனிதனும் உயிர் வாழ்வதற்கான அடிப்படைகளே, வாழ்வுபற்றிய வகை வகையான சர்ச்சைகளின் வாயிலாக இவ் ஆசிரியர் இச் சித்திரங் களில் ஆராய்கிருர். குழந்தைப்பருவ நினைவுகள், சிறிது சிறிதாக மங்கி மறையும் உறவினர்கள் தெரிந்தவர்களின் சாயல்கள், மண்ணகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள போற்றத்தகுந்த ஞாபகச் சின்னங்கள், கடந்துபோன நாட்களின் நிலைபேற்றை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் வரலாறும் ஆகியவற்றைக் கொண்ட இறந்தகால வாழ்க்கை, தற்காலத்தவருக்கு, இழந்துவிட்ட ஒரு உலகமே ஆகும். இழந்துவிட்ட அந்த உலகத்தின் அழைப்பு மனிதனுக்கு உயர்வானது. 'சிறுபருவத்தின் நிலையங்களிலிருந்து’’ என்ற பெயரில் வி. பெத்ரோசியன் எழுதிய கதைகளின் வரிசையில் அந்த அழைப்பு எதிரொலிக்கிறது. அவற்றில் ஒன்ருன அவன் 'அம்மாவின் வீடு' இத் தொகுதியில் இடம் பெற்றிருக்கிறது. இக் கதை வரிசைகளின் நாயகன்-அதை அப்படிக் குறிப்பிடுவது சாத்தியம் ஆகுமெனில்-அந்த ஆசிரியரின் குழந்தைப்பருவமே ஆகும். முதிர்ச்சியுற்ற வாழ்க்கையின் உளஇயலினுள்டே அர்த்தம் உள்ளதாக ஆகிவிடுகிற குழந்தைப்பிராயம்: கடந்த காலத்தின் சித்திரங்களை அதே நிலையங்களிலிருந்து எழுப்புகிற பர்வம். சென்றுபோன காலத்தின் விஷயங்கள், நிகழ்ச்சிகள், மனிதர்கள், காதல்கள், கனவுகள், சுகந்தங்கள், பாடல்கள் எல்லாம் வருத்தத்துடன் நினைவுகூரப்படுகின்றன. நுண் உணர்வும் இசைக் காவியப் பண்பும், ஏக்கமும் எண்ணிப்பார்த்தலும், இரக்கமும் மென்மையும், துக்கமும் வாழ்வின் நிலையாமையும், கண்ணிரும் இறந்தகால நினைவுகளைக் கொண்ட மவுனமும்கூட அந்த மனநிலைமையின் முக்கிய அம்சங்கள் ஆகும், அவன் "அம்மாவின் வீடு' என்ற கதை மேலே கண்ட கூற்றுக்கு ஏற்ற சிறந்த சான்று ஆகும். வாழ்க்கை நிலைமைகள் காரணமாகச்