பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxyii சொந்தக்காரர்களிடமிருந்தும் பிறந்த வீட்டிலிருந்தும் ஒருவன் சிறிது சிறிதாக வேறுபட்டுப்போவதையும், வீட்டின்மீதும் உறவினர்மேலும் உள்ள அன்பை, நினைவு மற்றும் ஏக்கத்தின் வடிவில் தனது உள்ளத்தில் சுமந்தாகவேண்டிய பிரச்சினையையும் இந்தக் கதை எடுத்துச் சொல்கிறது. யுத்தத்துக்குப் பிற்பட்ட காலம் முதல் இன்றைய வாழ்வு வரை உள்ள கால அளவில், ஆர்மேனிய கிராமத்தின் சித்திரங்களை யதார்த்தமாய் அழுத்தமான வர்ணங்களில் எச். மாடவோசியன் உருவாக்கியிருக்கிருர், கிராமம், அதன் சமூக மற்றும் அறநெறி நிலையோடும், பெரிய வெளி உலகத்துடன் அது கொண்டிருக்கிற பல பிணைப்புகளோடும், இன்றைய வாழ்வின் முக்கியப் பிரச்சினைகளே வெளிப்படுத்துவதற்கு ஏற்ற மூலாதார முன்னிலைமையாக அவருக்கு அமைந்திருக்கிறது. எச். மாடவோசியனின் படைப்புகள் அனைத்தும் ஒன்ருேடு ஒன்று இணைந்தனவாகவே அமைந்துள்ளன. பலப்பல கிளைகளைக் கொண்ட ஒரு நாவலின் வெவ்வேறு அதிகாரங்களாகவே அவை தோன்றுகின்றன. எழுத்தாளரின் படைப்பு அடிப்படையும், வர்ணிக்கப்படுகிற சுற்றுப்புறங்களும், ஆதார நிலைமைகளும் கதாபாத்திரங்களும் நிலையானவையாய், மாரு தனவாய் இருக் கின்றன. எச். மாடவோசியனின் படைப்புகள் மூன்று ஆதாரபூர்வமான அ டி நிலை க ளை க் கொண்டிருக்கின்றன. 'எருமை’ என்ற கதையிலும், நாங்களும் எங்கள் மலைகளும்’ எனும் குறுநாவலிலும், இயற்கையின் இயல்பான ஓசைகளுக்கு மிக அருகிலே அவரது எழுத்துநடை நம்மை அழைத்துச் செல்கிறது. வாழ்க்கையின் துயரம், வாழ்ந்த வாழ்வு என்று கூறப்படுகிற, கடுமையான, ஆத்மாவை அரிக்கின்ற பயணம் ஆகியவை எச். மாடவோசியனின் இரண்டாவது ஆதார அடிநிலை ஆகும். அவரது படைப்புகளின் இந்த அம்சம், சுமை தாங்கும் குதிரைகள்’’ என்ற கதை வரிசைகளிலும், * ஒரு தாய் தன் மகனுக்குக் கல்யாணம் பண்ண முற்படுகிருள்’’ என்ற குறுநாவலிலும், 'ஆரம்பம்’, மரங்கள்’’ ஆகிய கதைகளிலும் பூரணமாகப் பிரதிபலிக்கிறது, மாடவோசியனின் மூன்ருவது அடுக்கு, மிச்ச சொச்சம்' என்ற குறுநாவல் சம்பந்தப்பட்டது. அதில் அவர் ஒரு புதுவிதமான கதாநாயகனே உருவாக்கியிருக்கிருர், அவன் பிறப்பினால் ஒரு கிராமவாசி. இப்போது அவன் ஒரு பெரிய நகரத்தில் வாழ்க்கையின் புதிய நிலைமைகளில் வசிக்கிருன். அவனது பூர்வீக ஆரம்பங்களும் நிகழ்கால நாட்களும் இணைந்து அவனுடைய நுண் உணர்வு