பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹோவன்னஸ் டுமேனியன் 器 3 எங்கள் ஊர்ப் பள்ளியில் நான் இரண்டு வருஷங்கள் படித்தேன். அதன் பிறகு என் தந்தை என்னைப் பக்கத்து நகருக்கு இட்டுச் சென்ருர். அங்கே இருந்த பெரிய பள்ளியில் என்னைச் சேர்த்துவிட்டார். இது எனக்கு ஒரு புதிய உலகமாக இருந்தது. எல்லா வீடுகளும் சிவப்புக் கூரைகள் பெற்றிருந்தன. நகர மக்கள் அனைவரும் நேர்த்தியான, தூய ஆடைகள் அணிந்திருந் தார்கள். பள்ளிக்கூடமும் பெரிதாகவும் அழகாகவும் இருந்தது. ஊர்ப் பள்ளியில் ஒரே ஒரு வாத்தியார்தான் இருந்தார். இங்கோ அநேக ஆசிரியர்கள். அவர்களில் ஒருவர் பெண். இது எனக்கு இனிமையான ஆச்சர்யமாக இருந்தது. எனது புதிய சூழ்நிலைகளுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் தகுந்தாற்போல, என் ஆடைகளும் ஒரு மாறுதலுக்கு உள்ளாயின. இப்போது நான் அழகிய, சுத்தமான, நகரப் பள்ளியின் சீருடை அணிந்தேன். இந்தவித மாறுதலுடன் நான் விடுமுறைக்காக எனது ஊருக்குத் திரும்பினேன். நெலோவும் என் இதர பழைய நண்பர்களும், நான் வீட்டுக்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்டதும், காலையில் முதல் வேலையாக அங்கே வந்து, சுற்றி அலைந்து, உள்ளே எட்டிப் பார்க்க முயன்ருர்கள். அவர்களை வரவேற்க நான் வெளியே போனேன். நாங்கள் பரஸ்பரம் என்ன பேசினுேம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனல் எங்களுடைய பழைய தோழமை போய்விட்டது என்பது எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் முதல் காரியமாக எனது சீருடையைத்தான் கவனித்தார்கள். என் அத்தியாவசியமான கட்டை ச் சட்டையை ஒரு தினுசாகப் பார்த்தபடி நெளோ சொன்னன் : உன் வாலிலிருந்து இறகுகளை அவர்கள் பிடுங்கி விட்ட மாதிரித் தோன்றுகிறது’ என்று. எல்லோரும் சிரித்தார்கள். எனக்கு வருத்தம் ஏற்பட்டது. ஆனலும் நான் ஒன்றும் பேசவில்லை. பிறகு நெலோ என் சட்டைத் துணியைத் தொட்டுப் பார்த்தான். மற்றவர்களும் அப்படியே செய்தார்கள். துணியின் மென்மைபற்றி அவர்கள் அனைவரும் வியந்தார்கள். அப்போதுதான் நான் முதல் முறையாக அவர்களுடைய ஆடைகளை நன்கு கவனித்தேன். அவை அழுக்கு நிறைந்தும் கிழிந்துபோயும் இருப்பதைப் பார்த்தேன். உண்மையில், அந்த ஊர் முழுவதுமே வறுமை மிகுந்து அழுக்குமுட்டிப்போய் இருப்பதாக என் பார்வையில் பட்டது.