பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密 என் நண்பன் நெலோ இப்பவும் அவனிடம் அன்பு செலுத்தவும் முயல்கையில், எனக்கு நானே சொல்லிக்கொள்வது இதுதான். அமைதியான, நட்சத் திரங்கள் ஒளிர்ந்த, நிலாக்காலத்து இரவுகளில் அவன் எப்படி இருந்தானே, அதேபோல தெலோ எப்பவும் எனக்குத் தோற்றம் அளிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனல், அது சாத்தியமற்றது என நான் அறிகிறேன். அப்படி அவனை நான் காண முடியாது. உடனடியாகவே மற்ருெரு சித்திரம், வெட்க மானதும் துயரம் தருவதுமான ஒன்று என் மனசில் எழுகிறது. எனது படிப்பை முடித்து, இவ் உலகில் எனக்கு ஒரு ஸ்தானத்தை அமைத்துக்கொண்ட பிறகு, நான் மீண்டும் எனது சொந்த ஊருக்கு வந்தேன். அன்றைய தினம் ஊர் மைதானம் கும்பலும் சந்தடியும் மிகுந்து காணப்பட்டது. திடலின் நடுவே ஒரு கம்பத்தில் கட்டுண்டு நின்ருன் நெஸோ, அவன் தலை அவமானத்தால் தாழ்ந்திருந்தது. திருடியதற்காக அவன் தண்டிக்கப்படுகிருன் என்று என்னிடம் சொன்னர்கள். அவனுக்காக நான் பரிந்து பேசினேன். அவன் விடுதலையானன். ஆளுலும், சுட்டெரிக்கும் வெயிலில், கம்பத்தில் கட்டுண்டு, குமுறும் கும்பலிடையே அவன் தலைகவிழ வெட்கி நிற்பதை நான் என் மனக்கண்ணில் இன்றும் காண் கிறேன், திருடுவதும், அதற்காகக் கசையடி படுவதும் எங்கள் ஊரில் சர்வசாதாரண விஷயங்கள்தான். ஆனால், நிலாக்கால இரவு களில் கட்டைகள் மீது அமர்ந்து எங்களுக்குக் கதைகள் சொன்ன சின்ன நெஸோவை நான் மறக்க முடியாதது போலவே, இந்த திகழ்ச்சியையும் என்னல் மறக்க முடியாது. எவ்வளவு புனிதமான, இனிய நெலோ-எனது சிறுபருவத் தோழன் நெளோ,