பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவெதிக் இலாகியன் (1875–1957) சாஅதியின் கடைசி வசந்தம் வசந்தம் வந்துவிட்டது. மண்ணுலகை அற்புதமாக மாற்றுகிற மாய வசந்தங்களில் அதுவும் ஒன்று. சந்தோஷத்தின், மற்றும் சோகத்தின் கவிஞனை சாஅதி அதைப்போல் நூறு வசந்தங்கள் கண்டிருக்கிருன். அன்று அதிகாலையிலேயே சாஅதி விழித்தெழுந்தான். கானப்பறவை மீண்டும் கீதமிசைப்பதைக் கேட்கவும், வசந்த கால அற்புதங்களே மறுபடியும் பார்ப்பதற்காகவும், ரோணுபாத் நதிக்கரையின்மீதிருந்த பூந்தோட்டத்துக்கு அவன் போனன். இயற்கையின் வெகுமதியான ரோஜா மலர்களைச் சூடி, காலைத் துயிலில் ஆழ்ந்திருந்த விராஜின் வயலை அவன் நோக்கினன். நறுமணம் கலந்த வெண்பனியினல் திரையிடப் பட்டிருந்தது அது. பூத்துக் குலுங்கிய மல்லிகைச் செடி ஒன்றின் கீழே, அழகான விரிப்பின்மீது சாஅதி உட்கார்ந்தான். அவன் நடுங்கும் கை களில் பசுமையும் செம்மையும் கலந்த ரோஜா மொக்கு ஒன்றைப் பற்றியிருந்தான். 'தன்னே அணைக்கும் காதலனைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கும் ஒரு இளம் பெண்ணைப்போல, காலை மென் காற்றுக்காகத் தன் இதழ்களை விரிக்கிறது இந்த ரோஜா” என்று மெதுவாக முணுமுணுத்தான். சாஅதி இப்போது மிகுந்த வயோதிகளுகிவிட்டபோதிலும், அவனுடைய ஆத்மா அரைவாசி மூடிய இமைகளினூடாகவும் காதுகளின் வழியாகவும் இந்த உலகத்தின் அற்புதமான நிகழ்ச்சி களையும் உருவங்களையும், அறிமுகமாகாத நெடுந்தொலைவுகளின் இசைகளையும் நிசப்தங்களையும் இன்னும் கண்டும் கேட்டும் மகிழ்ந்தது. கவிதை எனும் மந்திரசக்தி-விண்மீன்களின் ராஜ் யத்தில் உள்ள காஃப் மலையின் உச்சியில் தனது கூட்டை அமைத் துள்ள அந்த ஜாருக்த் பறவை-அவளுேடு இன்னும் பேசிவந்தது தான் காரணமாகும் . - - ஒளி நிறைந்த கண்களும் சாம்பல்நிறச் சிறகுகளும் பெற்ற கானப்பறவைகள், காதல் கனலும் வசீகரமான இன்னிசைப்