பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& சாஅதியின் கடைசி வசந்தம் பாடல்களைக் கூவின. அவற்றின் பா ட ல்க ள் சாஅதியின் இதயத்தில் எதிரொலித்தன. நெடுந்துாரத்தில் காதலோடு மலர்ந்து திகழும் ரோஜாக் களின் நறுமண வாழ்த்துகளை வருடுகிற மென்காற்றின் கன்னி மூச்சு கொண்டு தந்தது. இக் காதல் அறிவிப்புகளை சாஅதியின் ஆத்மா புரிந்துகொண்டது. "இயற்கையின் மொழிகளை ஒரு அன்பு உள்ளம் எப்போதும் புரிந்துகொள்ளும். இசைப் பொருத்தத்தினுல் நிறைந்திருக் கிறது இவ் உலகம். அதன் காதல் போதை அமரத்துவமானது. ’’ இப்படி வெகுநாட்களுக்கு முன்பு அவன் கூறியிருந்த வார்த்தை களை சாஅதி நினைவுகூர்ந்தான். கானப்பறவையின் இன்னிசையாலும் சிவப்பு ரோஜாக் களின் அழகிலுைம் பரவசமுற்ற சாஅதி, அவற்றின் மோக மூட்டும் நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்தான்; அதனல் கிறக்க முற்றுக் கண்களை மூடினன். கனவில் நிகழ்வதுபோல் இந்த உலகம் தன் உள்ளத்தில் சலனிப்பதை அவன் கண்டான். புனிதமான தாமரை மலர்கள் அணிசெய்ய அசைவற்று விளங்கும் இந்திய ஆறுகளே அவன் கண்டான். அறிவுள்ள யானைகள், அடர்ந்த காடுகளின் நடுவில் வாட்ட முற்று நிற்பதை அவன் பார்த்தான். டில்லியின் தங்க மாளிகை களில், தங்கள் கருநீலக் கூந்தலில் செக்கச் சிவந்த மலர்கள் சூடிக் காட்சி தரும் இனிய மகளிரையும் அவன் பார்த்தான். துாரானின் குறைப் பிரதேசங்களைக் கண்டான். சுடர்வீசும் வாள்கள் ஏந்திய கொடிய கயவர்கள் சூறைக்காற்றின் சிறகு களால் சுமந்துசெல்லப்படுவதையும் அவன் பார்த்தான். சூரியனல் பொசுக்கப்படுகிற பாலை நிலத்தையும் அவன் பார்த்தான். மேலே பறக்கும் கழுகுகளின் கூரிய கண்களிலிருந்து தப்ப வேகம் வேகமாக ஒடும் மான்களை, குதிரைகள் மீதமர்ந்து துரத்திச் செல்கிற .ெ ப தூ யி ன் வேட்டைக்காரர்களையும் பார்த்தான். புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் வரிசைகளைப் பார்த்தான். அவர்கள் மெக்காவின் வாயில்கள் முன்னே முழந் தாளிட்டுப் பணிந்து பாடித் துதிப்பதையும் அவன் கண்டான். புராதன எகிப்தின் புகழ்வாய்ந்த அற்புதங்களை, பரந்து விரிந்த கடல்களின் நீல மினுமினுப்புகளை, டமாஸ்கஸ் நாட்டின் பட்டுபோல் மிருதுவான சருமம் பெற்ற பெண்களின் ஒளிவீசும்