பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவெதிக் இஸ்ாகியன் § உடல்களை அவன் பார்த்தான். வளைந்து கொஞ்சுகிற அவர்களின் கைகள் இளம் சா அதியின் கழுத்தை அழகிய மாலைபோல் சுற்றித் தழுவியது உண்டு. சாஅதி நெடுமூச்சுயிர்த்து, கண்களைத் திறந்தான். * ஐயோ, எனது நூறு ஆண்டுகள் இனிய கனவைப்போல் பறந்து போய்விட்டன : ஒரு இரவின் கனவுக் காட்சிபோல் மறைந்தன. அத்தனே வருஷங்களும் ஒரு நொடிப்பொழுதுபோல் ஓடிவிட்டன. இன்பக் கதைகளே, கானப்பறவைகளே, ரோஜா மலர்களே, ரோஜாக்களின் சகோதரிகளான இன்பம் நிறைந்த இளம்பெண்களே, நீங்கள் எல்லோரும் எப்போதும் எனக்குத் துணையாக இருந்ததுதான் காரணம்!” வெள்ளி மலர்கள் ஒளிர்ந்த சொர்க்கத் தோட்டத்திலிருந்து கதிரவன் வெளிப்பட்டான். புல்லும் பசிய இலைகளும், கற்களும் குன்றுகளும் மினுமினுத்தன. ஏனெனில் இரவு அவை அனைத்தின் மீதும் வைரப் பொடியை வாரித் தெளித்திருந்தது. நீல வானத்தையும், சூரிய உதயத்தின் பொன்னெளியில் பறந்து செல்லும் பறவைகளையும் சாஅதி ஆழ்ந்து நோக்கினன். வியப்போடும் பயத்தோடும் அவன் அவற்றைப் பார்த்தான். 'உண்மை. உலகம் ஒரு அதிசயம்தான். ஒரு மோகினிக் கதைதான். அதன் அற்புதமும் அழகும் நிரந்தரமானவை. 'நாள்தோறும் நான் இந்த உலகத்தைப் பார்க்கிறேன், ஒவ்வொரு நாளும் அதை அன்றுதான் முதல் முதலாகப் பார்ப்பது போல் நான் புதுவியப்புப் பெறுகிறேன். உலகம் பழகிப்போனது தான். இருந்தாலும், அது அற்புதமாக இருக்கிறது. பழசானது என்ருலும் நித்தியப் புதுமை உடையது. தனக்குத் தானே நிகரான-நிரந்தரமான, விளக்கிச் சொல்ல முடியாத-ஒரு தனி அழகினல் அது புதிதாக விளங்குகிறது.' சாஅதி மீண்டும் உலகை நோக்கினன். இயற்கையின் பன் முக, அதிசய விளையாடல்களைப் பார்த்தான். பச்சைப் புல் வெளியில் பவளச் செந்நிறக் கால்களால் நடக்கும் இரண்டு புருக்கள் கொஞ்சிக்கொண்டிருந்ததை அவன் கவனித்தான். திரும்பவும் உரக்கப் பேசின்ை. - 'உலகம் ஒரு வசியத்தில் கட்டுண்டிருக்கிறது. மறைந் திருக்கும் எவளோ ஒரு மாயக்காரியின் கைக்கோலின் மந்திர சக்தியில் அது சிக்கியுள்ளது. அதனல் எ ல் லாமே இனிய மோகினிக் கதையாக மாறிவிட்டது.