பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 () சாஆதியின் கடைசி வசந்தம்

உலகம் தலைதெறிக்க ஓடுகிறது. சிதறிப் பிரிகிறது. எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆலுைம், இந்த மகத்தான உலகத்தைப் புதுப்பித்து, மறுபடியும் சீரமைத்து, இப்படி அற்புதமான அழகுக் கதையாய் நம் முன்னே பரப்பி வைப்பதுதான் எதுவோ?

"காதல் துடிப்பினல் கனத்துச் சோர்ந்த இதயத்தோடு, மானே, பாறைகளில் இடித்துத் தன் கோம்புகளே முறித்துக் கொண்டே கூரிய குன்றின்மீது ஏறும்படி செங்கிற சக்தி எது? 'அதன் பச்சைப் போர்வையைக் கிழித்து வெளிப்பட்டு, மிக இனிய நறுமணத்தைப் பரப்பும்படி ரோஜாவை எது தூண்டு கிறது? 'மனிதப் பிறவியை எங்கிருந்தோ தோன்றவைத்து, சிந்திக்கவும், துன்பப்படவும், சுட்டெரிக்கும் ஆசைகளின் தீக் கொழுந்துகளே அனுபவிக்கவும், சாக விரும்பாமல் எப்போதும் இருக்கவும் தவிக்கும்படியாக, ரத்தமும் சதையும் பெற்றுத் திரியச் செய்வது எது? - "ஆ, காதலே, வெற்றிகொள்ள முடியாத சக்தியே, இனிய கொடுங்கோலனே! நெடுங்காலமாக நான் உன்னை அறிவேன். ஆயினும், உனது ஆழத்தையும் உன் சாரத்தையும் ஒருபோதும் நான் பூரணமாக உணர முடிந்ததில்லை.” இதுதான் அவனது கடைசி வசந்தம் என்று சாஅதியின் உள்ளுணர்வு அவனுக்கு உணர்த்தியது. அவனுடைய இறுதி வசந்தம்! தோட்டக் கதவு திறந்தது. விராஜின் நளியத், மென்காற்றின் வருடுதலுக்குத் தனது பணிவெண் உடலைக் காட்டியவாறு உள்ளே வந்தாள். அடிக்கடி வருகிறவள்தான். சாஅதியின் காதவி அவள், திராட்சை மதுபோல் கிறங்கவைக்கும் அவளுடைய உதடு களும், துணி போர்த்தாத அவளது கரங்களின் வெண்மையும் கதகதப்பும், நூறு வயதுக் கவிஞனின் துளக்கமற்ற இரவுகளை அவ்வப்போது ஆனந்தமயமாக்கி யிருக்கின்றன. சாஅதி, தன் இளமை நிரம்பிய, வாட்டமுருத இதயத் தில்ை பூரணமாக அவளைக் காதலித்தான். அவனது அமரகாவிய மான குவிஸ்தானில் பொன் எழுத்துகளால் அவளைச் சித்திரித் திருக்கிருன்.