பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷密 வயிறு இடத்துக்குப் போவான்? அதுவும் விதியினல் முன்பே திட்டமிடப் பட்டதுதான். சதுக்கத்துக்கே போவான் அவன். அவன் அனைத்து முடுக்குமூலைகளிலும் அலேவான். நகரத் தராசு மேடை, முலாம்பழங்கள், தர்பூசணி, வெள்ளரிக் குவியல்கள், பால் சாலை எல்லாம் சுற்றுவான். அவை அனைத்தின் விலைகளையும் விசாரிப்பான். பிறகு, கசாப்புக்கடை பக்கம் போவான். சன்னல்கள் முன்னே நிற்பான். இறைச்சி வகைகளைக் கண்ணுேட்டமிட்டபின், உள்ளே நுழைவான். மென்மையும் சதைப் பிடிப்பும் உடைய கறிவகைகளைத் தடவிப் பார்ப்பான். பிறகு, வீடுநோக்கி நடப்பான். சதுக்கத்தின் ஒரத்தை அடைந் ததும், அங்கே உள்ளே உயர்ந்த நடைமேடையின்மீது உட்காருவான். பிரம்பின்மேல் கைகளை ஒய்வாக வைத்தபடி அவன் சதுக்கத்தையும் அதில் குவிந்துகிடக்கிற அனைத்துவித உணவுப் பொருள்களையும் பார்வையிடுவான். உலகத்தில் வளம் கொழித்தது; ஒவ்வொன்றும் மிக நிறையவே இருந்தது. ஆனல் பரிதாபத்துக்குரிய விஷயம், ஒவ்வொன்றும் மிக்க விலை உயர்ந்ததாக இருந்தது. பச்சை திராட்சைகள், தெய்வீக முலாம்பழங்கள், நேர்த்தி யான பாலாடைக் கட்டிகள் ஆகிய அந்த வற்ருப் பெரும் செல்வத்திலிருந்து ஒரு துணுக்கு, அல்லது ஒரு மணி, அல்லது ஒரு துளிகூட அவனுக்குக் கிட்டாது! இந்த உலகம் ஒரு கனவு; பிரமிக்கவைக்கிற, வேதனை நிறைந்த, கொடுமையான கனவு எவ்வளவு பெரும் பசி, எவ்வளவு உணவுகளின் பெருக்கம்; அவற்றை அடைய முடியாத நிலைமையும்கூட. இதெல்லாம் எங்கே முற்றுப்பெறும்? ஒரே ஒரு தடவை தன் வயிறு நிரம்ப உண்டு களிப்பதற்கு அந்தத் தச்சன் ஆண்டுக் கணக்கில் ஏங்கவேண்டுமா? இந்த உலகத்தைப் பொறுத்தமட்டில், உயிர் பிரியாத நிலையிலேயே அவன் ஏற்கெனவே செத்துப்போனவன். ஏனெனில், செத்தவர்கள்தான் சாப் பி டு வ தி ல் லே. ஆயினும், அவன் உயிரோடு இருந்தான். அவன் தன் கண்களால் அனைத்தையும் பார்த்தான். தர்பூசணியின் குளு ைம யான வட்டத்தை இப்போதுதானே அவன் தொட்டுப் பார்த்தான் ஆட்டுக் குட்டியின் மிருதுவான கறியை அவன் தடவினனே... ஆகவே, அவன் உயிரோடு இருக்கிருன்: இன்னும் சாகவில்லை. உலகத்துக்கு என்ன வந்துவிட்டது: வயிருரத் தின்னமல் அவன் நிஜமாகவே செத்துவிடுவான?...