பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி. தெமிர்ச்யன் 盟? அவன் கசப்புற்ருன், கோபம் கொண்டான், வெறி அடைந் தான. தனக்குத் தானே பேசியபடி அவன் வீட்டுக்குத் திரும்பிப் போவான். அவன் முற்றத்தில் அடிவைத்ததுமே, அவனுடைய மயக்கப் பிதற்றல்களை அவன் மனைவி கேட்டுவிடுவாள். அவன் உள்ளே நுழைவதைப் பார்ப்பதற்காக அவள் தன் கண்களை அசைக்கவும் மாட்டாள். அவன் மயக்கநிலையில் ஆயிரம் தடவைகள் அவ் வீட்டுக்குள் புகுந்திருக்கிருன் மாடிப்படிகளைத் தன் பிரம்பினுல் ஆயிரம் முறை தட்டியிருக்கிருன் அமங்கல நினைப்புகளோடு உறுத்து நோக்குகிற, எதையும் பார்க்காத, அவனது மங்கலான கண்களை அவள் எப்போதும், நிரந்தரமாகக் கண்டிருக்கிருள் . உண்மைதான். தச்சன் எந்த ஆளையும் எந்தப் பொருளையும் பார்க்கவில்லை. ஒவ்வொன்றிலும் தனக்கு விருப்பமானதைஉணவையே-அவன் தேடினன். தச்சன் தனது இடத்துக்கு வந்து உட்காருவான். சுற்று முற்றும் பார்ப்பான். புதுமையானது ஒன்றுகூட இல்லை. உலகம் உறைந்துபோனதுபோல், அதன் சக்கரம் அசையாது நிற்பது போல் தோன்றும். அவன் மனைவி வாசல்படியில் அமர்ந்து காலுறை பின்னிக் கொண்டிருப்பாள். இப்போது வாய் திறந்து பேசவேண்டும், தன் இதயச் சுமையைக் கரைப்பதற்காக ஏதேனும் குரல் எழுப்ப வேண்டும் என்ற அவசியத்தை தச்சன் உணர்வான். "நான் சதுக்கத்துக்குப் போனேன். அங்கே நல்ல தக்காளிகள் இருந்தன. கொஞ்சம் வாங்கலாம் என்று நினைத்தேன். புளிக் காடியோடு சேர்த்து நாம் சாப்பிடலாமே. நாசமாய்போக, விலை ரொம்ப அதிகம். என்னிடம் பணம் இல்லை!’ வருத்தத்தோடும் நம்பிக்கை வறட்சியோடும் அவன் எச்சிலைக் கூட்டி விழுங்குவான். பாலைவனத்தில் வழி தவறிப்போன ஒரு பிராணிபோல் அவன் காணப்பட்டான்; புகலிடம் எதையும் காணுது நடந்து நடந்து அலுப்புற்ருன். இன்றும் நேற்றுப் போலவேதான். அங்கு மவுனமே நீடித்தது. அவன் மனைவி பேசமாட்டாள். அவள் என்ன பேசுவது? அவளுக்கே ஏகப்பட்ட கவலைகள். அவள் பாடுபட்டுத்தான் வாழ்க்கை நடத்தவேண்டியிருந்தது. துணி துவைப்பது, துணிகளை வெளுக்கச்செய்வது போன்ற வீட்டு வேலைகளைச் செய்து சொற்பமான ரூ பி ஸ் களை அவள் ஆ-2