பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & வயிறு சம்பாதிப்பதே சிரமமாக இருந்தது. அவள் சம்பாத்தியம் முழுவதும் ரொட்டி வாங்குவதிலேயே காலியாயிற்று அப்படி வாங்கிய ரொட்டியில் பெரும்பகுதி அவள் புருஷனின் வயிறு என்கிற படுகுழிக்குள்தான் போய்ச் சேர்ந்தது. அந்த அபலைப் பெண் நாள் முழுவதும் கடுமையாக உழைத்துக் கொண்டுவந்த பணம் இரண்டு பவுண்டு ரொட்டி வாங்குவதற்குத்தான் போது மானதாக இருந்தது. அதுவே திருப்திகரமானது என்று எண்ணி, அவள் ஒரு வார்த்தைகூடப் பேசுவதில்லை. கடைசியாக அன்றைய தினத்தின் புனிதமான, ஆனந்த மயமான நேரம் வந்துவிட்டது. அவன் மனைவி உணவு எடுத்து வரப் போவாள். நிலவறையிலிருந்து மொச்சையோ தேயிலையோ கொண்டு வருவதற்காக அவள் போயிருக்கும் வேளையில், தச்சன் ஒரு கடுவாய்போல் எழுந்து, ரொட்டி இருந்த இடத்துக்குப் போவான்; அதைக் கிள்ளுவான்; கையில் எடுத்து அப்படியும் இப்படியுமாகப் புரட்டுவான்; தனது அழுக்குக் கைகளால் தடவுவான்; மோந்து பார்ப்பான். மேலும் தன்னைக் கட்டுப் படுத்த இயலாதவளுய், வெறித்தனமாக அதைத் தின்னத் தொடங்குவான்; கடித்துக் கடித்து, மெல்லாமல், சுவைக்காமல், விழுங்குவான். விக்கிக்கொண்டு தொண்டையைச் சொறிவான். அவன் மனைவி உள்ளே வருவாள். அனைத்தையும் பார்ப்பாள். சத்தம் செய்யமாட்டாள். அவ்வாறு செயல்புரிவதை இயல் பாகக் கொண்ட ஒரு மிருகத்தின் காப்பாளராக அவள் தன்னைக் கருதினுள். இடையிடையே அவள் தனக்குத் தானே குறைகூறிக் கொள்வாள்; சிலசமயம் மன்னிப்பாள். பிறகு மீண்டும் பழிப்பாள். ஆனல், பெரும்பாலும் அவள் சும்மா இருந்து விடுவாள். தனது துரதிர்ஷ்டத்தைச் சகித்துக்கொள்வாள். சாப்பாடு விசனத்தோடும் வேகமாகவும் முடிந்துவிடும். ரொட்டியை விழுங்கி முடித்ததும், தச்சன் சக்தி பெற்ற வளுய்ப் பேசத் தொடங்குவான். 'டோன வருஷம் இந்தச் சமயம் நம்மிடம் ஒரு மூட்டை வெங்காயம் இருந்தது’ என்ருே, அவித்த மொச்சையில் சாயங்காலத்துக்குக் கொஞ்சம் வைத்திருக்கிருயா?’ என்ருே கூறுவான். சாயங்காலத்துக்கு என்று ஒதுக்கி வைக்கும்படி அதில் எவ்வளவு இருந்துவிட்டது?’ என்று அவன் மனைவி வெடுக்கெனக் கூறி, தட்டுகளை அகற்றுவாள். ஆளுல் அவை எல்லாம் ஒரு சடங்குபோல் மறுபடியும் நிகழும்; அசையாத துயரநிலையிலிருந்து எதையும் அது மாற்ருது.