பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி. தெமிர்ச்யன் ? § பனிக்காலம் அதன் கவலைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்தது. தச்சன் மாடி முகப்பின் கம்பி அளி அருகில், அதன் விளிம்பில் மோவாயை வைத்தபடி, எதிர்வீட்டு முற்றத்தில் நடைபெறும் காட்சியைக் கவனித்துக்கொண்டிருந்தான். அண்டை வீட்டில் வசிக்கும் கடைக்காரன் ஒரு வண்டி மரக்கட்டைகள் வாங்கி யிருந்தான். அவை வண்டியிலிருந்து இறக்கப்படுவதை அவன் பார்த்தவாறு நின்ருன். சிவந்து கன்னங்களை உடைய கிழவன் ஒருவன் ஊக்கத்தோடு மரம் அறுத்துக்கொண்டிருந்தான். அவன் சீர்தவருது சிணுங்கிக்கொண்டுமிருந்தான். ஒரு ஜோடி காளைகள், ஒன்று நின்றவாறும் இன்னென்று தரைமீது படுத்தபடியும், பாரம்பரியமான மந்தகதியில் அசைபோட்டுக்கொண்டிருந்தன. புல் மணமும் மர வாசனையும் கலந்த ஏதோ ஒரு வாடை தெருவில் மிதந்துகொண்டிருந்தது. அன்றைய தினம் பிரகாசமாக இருந்தது. சூரிய ஒளி சிவப்பு ஆம்லெட் நிறத்தில் மிளிர்ந்தது. தச்சன் அதை எல்லாம் பார்த் தான். தன் பசியினுல் தவித்தான், மாரிக்காலத்துக்காக அவனும் சேமித்து வைத்த ஆனந்தமயமான பழைய நாட்களை நினைவுகூர்ந்தான். இனிமையான, ஆளுல் திரும்பவும் கிடைக் காத, தனது குழந்தைப் பிராயத்தை அவன் நினைத்தான். முதிய அறுப்புக்காரன் வேர்வையால் நனைந்துபோனன். அவன் மேலும் தீவிரமாக உழைத் தான். ஒரு மணி நேரம் மரம் அறுத்தானதும், அவன் வேலையை நிறுத்தினன். தன் பையிலிருந்து, சிவப்பான நாட்டுப்புறத்து ரொட்டித் துண்டு ஒன்றை வெளியே எடுத்தான். தனது மெலிந்த கைகளால் அதைத் துண்டு துண்டாகப் பிய்த் தான்; ஒவ்வொரு துண்டாக வாய்க்குள் திணித்து, வேகமாகத் தின்ருன், தச்சன் அவனையே பார்த்தான்; அவனும் அறுப்புக்காரனேடு சேர்ந்து மனசினல் ரொட்டி தின்பதில் முனைந்தான். பிறகு, நம்பிக்கை இழந்து மாடுகளைப் பார்த்தான். அவையும் அசைபோட்டுக்கொண் டிருந்தன. நாளின் சகல நேரமும் தச்சனின் நினைப்புகள் அசை போடுவதைச் சுற்றியே இயங்கின. எனவே, அந்தக் காட்சி அவனது கற்பனையை ஆத்திரமாக முடுக்கின. அவனைச் சுற்றி யுள்ள உலகம் முழுவதும் அசைபோட்டுக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒவ்வொரு ஒசையும், ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு விஷயமும் அசைபோடுவது தவிர வேறு எதுவுமில்லை. தச்சனின் கண்கள் படுத்துக்கிடந்த காளைமீது பதிந்தன. அதன் பின்பக்கத்துத் தொடை கொஞ்சம் துருத்திநின்றது. அவன்