பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்டீபன் லோரியன் ( 1889–1967) சர்க்கரைக் கிண்ணம் தி.பி.விஸில் இளைஞன் ஒருவன், கையில் ஒரு சிறு மூட்டை யுடன், ஸ்ால்தாத்ஸ்கி பஜார் வழியாக நடந்தான். அங்கே ஜனங்கள் ஊறவைத்த வெள்ளரி, மட்டரக வெண்ணெய், திருட்டுத் துணிமணிகள், மற்றும் பழைய தட்டுமுட்டுச் சாமான்களை விற்றுவந்தார்கள். அவன் ஒரு விலாசத்தைத் தேடி அலையும் அந்நியன்போல, நிலையாக அங்குமிங்கும் பார் த் த ப டி, அழுத்தமாகவும் ஒழுங்கற்றும் அடி எடுத்துவைத்து நடந்தான். அத்துடன், அவன் முகம், விமர்சகர்களால் அவமானப்படுத்தப்பட்ட கவிஞர் களுக்கு மட்டுமே இருக்கக்கூடியது போன்று, பாதி இடருற்றும் பாதி அவமதிப்புக்கு உள்ளாகியும் காணப்பட்டது. அவன் தனது பழைய இங்கிலீஷ் குல்லாய்க்குப் பதிலாக அகல விளிம்பு கொண்ட பிரஞ்சுத் தொப்பி அணிந்திருந்தால், ஒரு தொப்பி வாங்குவதற்காக அல்லது நாடகம் பார்ப்பதற்காக நகரத்துக்கு வந்திருக்கும் நாட்டுப்புற உபாத்தியாயர் என்றே எவரும் அவனே மதிப்பிடுவர். அல்லது, அவனுடைய நீண்ட, ரொம்பவும் சுருங்கிப்போன, கசங்கி வர்ணம் மங்கிய நீள மேலங்கிக்குப் பதிலாக, ரசாயன சாதனங்களால் சலவை செய்யப் பட்ட இறுகலான சட்டை ஒன்றை அவன் அணிந்திருந்தால், நாகரிகமற்ற ஒரு நகரத்திலிருந்து வந்திருக்கும் சிறிய கடைக் காரன் என்றே பிறர் அவனைப்பற்றி நினைப்பார்கள். ஆஞல், உண்மையில் அவன் அப்படி யாரும் இல்லை. நிஜத்தைச் சொல்லவேண்டுமானல், அவன் அப்போதுதான் விடுதலையாகி வந்த ஒரு கைதியாவான். ஓ, சிறையின் இரும்புக் கதவுகள் அவனுக்கு முன்னே திறக்கப்பட்டு, விண்ணிலிருந்து லேசான மழை துரறிக் கொண்டிருந்த தெருவுக்கு அவன் வந்தபோது, அவன் இதயம் எத்தகைய உவகையினல் துடித்தது. அந்த நேரத்தில், நிச்சய மாக அவன், ஜெயிலிலிருந்து வெளியே வருகிற ஒவ்வொரு நபரும் உணர்வது போலவே, எல்லாவற்றைப்பற்றியும் மிக