பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாகன் டோடோவென்ட்ஸ் )938 و س-834 3 ) ஒரு ஆர்மேனியன் குழந்தைப் பருவத்திலிருந்து சில காட்சிகள் (நாவலிலிருந்து ஒரு பகுதி) மெசபடோமியாவிலிருந்து வருகிற ஒட்டகப் பயணிகளின் கூட்டங்கள் எங்கள் வீட்டு வாசலின் முன்பாகத்தான் போகும். ஆசியா மைனரில் உள்ள பல்வேறு முக்கிய வர்த்தகக் கேந்திரங் களுக்கு, துர தொலைவில் உள்ள செபஸ்டியாவுக்கும், அவர்கள் போவது வழக்கம். பனிக்காலத்தில் எங்கள் பழத்தோட்டங்கள் காய்த்து ஒய்கிற கட்டத்தை அடையும் சமயம், ஒட்டகக் கூட்டங்கள் எல்லையிலாப் பாலைப் பெருவெளியை நோக்கித் திரும்பும். செல்வம் கொழிக்கும் பாபிலோனிய மற்றும் அராபிய நகரங்களுக்கு, நட்சத்திரங்களைப்போல் பிரகாசிக்கும் வைரங்களும் இதர மணிக்கற்களும் மிகுதியாகக் கிடைக்கும் இடங்களை நோக்கி, அவை போகும். தென் பிராந்தியத்தின் இனிமையான பேரீச்சம்பழங்களை ஒட்டகக் கூட்டங்கள் எங்களுக்குக் கொண்டு தரும், ஒட்டகக் கூட்டங்கள் வந்ததும் எங்கள் சந்தை மைதானம் உயிர்பெற்று விளங்கும். அவற்றின் சின்னஞ்சிறு மணிகளின் கிண்கிணி ஒசையிலுைம்-அறிவார்ந்த, அமைதி படிந்த ஒட்டகங்களின் கண்ணுேட்டங்களாலும்-துயருற்றுப் புல ம் பு ம் அவற்றின் நெடிய களைத்துப்போன குரல்களினலும் நகரம் நிறைந்திருக்கும். பாலைவன வானத்தைப்போலவே அமைதியானது ஒரு ஒட்டகத்தின் பார்வை. ஒட்டகக் கூட்டங்கள் பிரிந்துபோன பின்னரும் அந்தப் பார்வையின் நினைவு எங்கள் உள்ளத்தில் வெகு நாட்கள் நிலைத்து நிற்கும். மாரிக்காலத்தில் அவர்கள், காலுறைகள் தயாரிப்பதற்காக ஒட்டக ரோமங்களைச் சேகரிக்கும்பொருட்டுத் தங்களைத் தொடர்ந்து வரும் பிள்ளைகள் கூட்டத்தைச் சட்டைபண்ணுது, நடந்து போகையில், ஒட்டகங்கள் எங்கள் தெருக்களின் ஒரத்தில் வரிசையாகத் தென்படும் சுவர்கள் மீது தங்கள் கண்களைப் பதித்