பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

ஒரு ஆர்மேனியன் குழந்தைப். .....சில காட்சிகள்

நாட்கள் ஒடுகின்றன. அந்த ஒட்டகம் தனது மிருக முரண்டை விட்டுவிடவில்லை. காவலனுக்கு அதைத் தட்டித் தடவிக் கொடுப்பது அலுத்துவிட்டது. எங்கள் நாட்டின் கற்பாறைகளைப்போல், அதன் இதயம் கடினமாகியிருந்தது.

பனிக்காலத்தின் குளிர் தெற்கிலிருந்து வந்துள்ள மனிதனை பயப்படுத்த ஆரம்பித்தது. அவனிடம் உணவு எதுவும் எஞ்சியிருக்கவில்லை. அவனுக்கு யாரையும் தெரியாது. எவரிடமும் அவன் உதவி கேட்க முடியாது. ஒட்டகத்துக்காகத் தயாரிக்கும் மிருதுவான, பிசைந்த மாவையே அவனும் சாப்பிடுகிறான். ஒட்டகத்தின் முதுகிலிருந்து ரோமம் திருடும் பிள்ளைகளிடம், அவர்கள் அவனுக்கு ரொட்டி கொண்டு தந்தால், பதிலுக்கு அவனே அவர்களுக்காக ரோமத்தைப் பிடுங்கித் தருவதாக அவன் விவரிக்கிறான்.

ஒருசில நாட்களில், ஒட்டகத்தின் உடம்பில் ஒரு ரோமம் கூட இல்லாதுபோயிற்று. அதன் ரோமம் அனைத்தையும் அதன் காவலன் ரொட்டிக்காக விற்றுவிட்டான். அந்த மிருகம், பாலைவனத்தின் வீரநாயகன்கூட இப்போது குளிரை உணரலாயிற்று. ரொட்டிக்கு மாற்றாகக் கொடுப்பதற்கு ஒட்டக ரோமம் இல்லை; இனிமேல் பிச்சை எடுக்கவேண்டியதுதான் என்று எண்ணவைக்கும் நாளும் வந்தது.

அந்த வட்டாரத்தின் குழந்தைகள் தொடர்ந்து அவனுக்கு உணவு எடுத்து வருகிறார்கள். தங்கள் சாப்பாட்டின் மிச்ச சொச்சங்களைக் கொண்டு தருகிறார்கள். காவலன் அவர்களை அணைத்து, நன்றி உணர்வோடு முத்தமிடுகிறான்.

வலிமை நிறைந்த இளைஞர்கள் சிலர் பாலைவன மனிதனுக்கு உதவிபுரியத் தீர்மானிக்கிறார்கள்.

"அது எழுந்து நின்றுவிட்டால் போதும். நேரே பாலைவனத்தைப் பார்த்து நடக்கத் தொடங்கிவிடும்" என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.

அவர்கள் இரண்டு மரக் கம்புகளை எடுத்து வருகிறார்கள். ஒட்டகத்தின் மடங்கிய கால்களுக்கடியில் சிரமத்தோடு அவற்றை வைக்கிறார்கள். இருபது ஆட்களின் துணையோடு, அவர்கள் அம் மிருகத்தை உயரத் தூக்குகிறார்கள்.

இரைஞ்சுகிற, நீண்டு ஒலிக்கிற, நெடுந்துயர ஒலமிட்டுக் கொண்டு, ஒட்டகம் நிற்கிறது. ஒவ்வொருவருக்கும் ரொம்ப சந்தோஷம். தனது மகிழ்ச்சியை எப்படி வெளியிடுவது என்றே பாலைவன மனிதனுக்குத் தெரியவில்லை. அவன் மென்மையாகப்