பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

ஆல்ப் மலை வயலட் பூ

கொண்டிருக்கவில்லை. ஒரு கூர்மையான பென்சிலும், தடித்த சித்திரக் கையேடு ஒன்றும் அவனிடம் இருந்தன. ஒரு முகம், அல்லது பாசி படர்ந்த பாறையோடு வசீகரமாகத் தோன்றிய ஒரு மூலை அவன் பார்வையில் பட்ட உடனேயே அவன் வரையத் தொடங்குவான்.

ஒருவன் புதைபொருள் ஆய்வாளன். மற்றவன் கலைஞன். அவர்கள் முதல் குடிசையை' அணுகியதும், அநேக நாய்கள் அவர்கள்மீது பாய்ந்தன. குரைக்கும் சத்தத்தைக் கேட்டதும், சில ஆட்கள் தோன்றி வாசற்படிகளில் நின்று அவர்களை உற்று நோக்கினார்கள்.

சாம்பல் நடுவில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள், குதிரைகளைத் துரத்தியபடி குரைத்தவாறே போகும் நாய்களைக் கவனித்தார்கள். வழிகாட்டி தன் சாட்டையினால் அவற்றை அடித்து விரட்ட வீண்முயற்சி செய்தான். நாய்கள் கோட்டைச் சுவர்கள் வரை அவர்கள் பின்னே சென்றன. அதன் பிறகுதான் அவை திரும்பிக் கீழ்நோக்கி ஒடலாயின.

கோட்டையின் கற்கள் உயிர் பெற்றதுபோல் தோன்றின. புதைபொருள் ஆய்வாளனோடு அவை பேசின. அவன் ஒவ்வொரு கல்லையும் அணுகினான்; எதையோ தேடிக் கீழே குனிந்தான்; பிறகு அதை அளந்தான்; தனது குறிப்பேட்டில் குறித்துக் கொண்டான். தன் கால்நுனியால் புழுதியைக் கிளறி வேறொரு வித வடிவம் பெற்ற கல்லைக் கண்டான். முடிவில், அவன் சுவர் மீது ஏறினான்; கோபுரத்தில் இருந்த ஒரு நுழைவாயில் வழியே தலையை வெளியே நீட்டினான். சுவரில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்தைப் பார்த்ததும் உரக்கக் கூவினான்.

வழிகாட்டி, குதிரையிலிருந்து இறங்கிச் சுவர் ஒரத்தில் புகை பிடித்துக்கொண்டிருந்தவன், சத்தத்தைக் கேட்டதும் குதித்தெழுந்தான். கண்ணாடிக்காரனப் பாம்பு கடித்துவிட்டது என்றே அவன் நினைத்தான்.

கலைஞன் சுவரின் இடிந்த பகுதிகளையும் ஊசிக் கோபுரத்தையும் படமாக வரைந்துகொண்டிருந்தான். கோட்டையின் நுழைவாயிலை அவன் வரையும்போது, அவனது பென்சில் நடுவில் நின்றது. ஏனெனில், அவன் காலடி ஒசையால் கலவரமடைந்த கழுகு அதன் கூட்டைவிட்டு வெளியே பறந்தது. இப்போது அது கோபுரத்தின் மேலே வட்டமிட்டது. இதர பறவைகளும் பெரிதாகச் சிறகுகளை அடித்துக்கொண்டு பறக்கலாயின.

பயந்துவிட்ட குதிரைகள் ஒன்றோடு ஒன்று நெருங்கி நின்றன. பாகுர் இளவரசன் புதைக்கப்பட்டிருந்த சிற்றறையைத் தான்