பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

ஆல்ப் மலை வயலட் பூ

இன்னொரு பெண்ணும் சரசரக்கும் ஆடைகளையே அணிந்திருந்தாள். ஆனால், அவள் சாம்பல் நிற மேல்சட்டையும், கரிய வெல்வட் தொப்பியும் அணிந்திருந்தாள். தொப்பியில் ஆரஞ்சு நிற ஊசியும் காணப்பட்டது.

அந்தப் பெண் இப்போது வெகு தொலைவில் இருந்தாள், ஒருவேளை பாஸ்ட் நதி, வேறொரு ஆற்றுடன் கலந்து ஓடி, முன்னொரு சமயம் அந்தப் பெண்ணின் பக்கத்தில் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தானே, அதே கரையை ஒட்டிய கடலில் சேர்ந்துவிடுவது சாத்தியமாகலாம்.

வழிகாட்டி இரண்டாவது உணவு டப்பாவைத் திறந்தான். ஆய்வாளன் அங்கிருந்த துணியையும், அதன்மேல் வைக்கப் பட்டிருந்த பித்தளைப் பாத்திரங்களையும் பார்த்துக்கொண்டேயிருந்தான். பையன் தனது காளான்களைத் தின்றான் , பிறகு, பளபளப்பான டப்பாவை ஆச்சரியமாகப் பார்த்தான். அந்நியர்கள் அதைக் காலி பண்ணட்டும் என்று காத்திருந்தான், அவன் பார்வையைக் கவனித்த வழிகாட்டி அதை அவனிடம் கொடுத்துவிட்டான். சிறுவன் அதைக் குலுக்கி ஆட்டலானான். வெளியே படுத்துக்கிடந்த ஒரு நாய், எஞ்சியிருந்து கீழே விழுந்த இறைச்சியை விழுங்கியது; துண்டுச் சிதறல்களை நக்கியது. உடனே அந்தப் பையன் பளபளக்கும் வெண்ணிற டப்பாவைத் தன் நண்பர்களிடம் காட்டுவதற்காக ஒடிப் போனான். அந்தப் பகுதிகளில் இதுபோன்ற ஒன்றை எவரும் கண்டதில்லை.

அந்தப் பெண் அடுப்பருகில் உட்கார்ந்து, கெட்டில் மூடியை அடிக்கடி எடுத்து, தண்ணீர் கொதித்துவிட்டதா என்று பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் சுள்ளிகளை ஏறத்தள்ளித் தியைத் தூண்டினாள், மேகம் மாதிரி எழுந்து, நாணல் தட்டைச் சுவர்களின் வெடிப்புகள் வழியாக வெளியேறிய புகையிலிருந்து பாதுகாக்கத் தன் கண்களை மூடிக்கொண்டாள்.

நீண்ட ஆடையின் அடியில் அவளது முழங்கால்கள் நன்கு படிந்து தெரியும் விதத்தில் அடுப்பருகே அமர்ந்திருந்த பெண், பொங்கிச் சுருண்டெழும் புகையில் எதிர்கால நிகழ்வுகளைக் கண்டறியக்கூடிய ஆற்றல் பெற்ற ஒரு மந்திரக்காரிபோல் கலைஞனுக்குத் தோற்றம் தந்தாள்.

இன்னொரு பெண் வெறும் காலுடன் நடந்ததேயில்லை; புகையும் அடுப்பருகே அவள் அமர்ந்ததும் இல்லை.

கடல் காலேநேரங்களில் வெண்கலக் குழம்புபோல் சீறி எழுந்து, கரைநெடுக நின்ற கற்பாறைகளை நக்கிக்கொண்டிருந்தது. அந்தப் பெண் கறுப்பு வெல்வட் தொப்பி அணிந்து