பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்செல் பாகுன்ட் 49 முடி அடர்ந்த அவன் கை கனத்த தடியைப் பற்றியது; அந்தப் பெண்ணின் முதுகுமேலே அறைந்தது. அவள் ஆடையின் பொத்தான்கள் கலகலத்தன. நீண்ட குழல்கற்றைகள் குலைந்து சரிந்தன. கெட்டில் சாய்ந்து விழுந்தது. தடியின் துணி முறிந்து ஒரு மூலையை நோக்கிப் பறந்தது. அவள் அழவேயில்லை; வேதனையால் வெறுமனே நெளிந்தாள். முதுகின் மீது கையை வைத்தபடி அவள் வீட்டை விட்டு வெளியே போளுள். அங்கே போய் அழுவாள், சிறுவன், இன்னும் டப்பாக்களே இறுகப் பற்றிக்கொண்டு அவள் பாவாடை மடிப்புகளில் ஒளிந்தபடி அவள் கூடப் போனன். புருஷன், ஒயாது முறுமுறுத்தவாறு தினத்தோசைகள் சிலவற்றைத் தின்ருன். பிறகு ஆட்டுத் தோல் தொப்பியைத் தலைக்குக் கீழே வைத்து, பாயில் நீட்டி நிமிர்ந்தான். மீண்டும் காகவபெர்தா மலைச்சிகரத்தின் மீது மவுனம் கவிந்தது. இரவின் கருமை வந்து சூழ்ந்தபோது அடுப்புகளில் நெருப்பு அணைந்துவிட்டது. ஊர் நாய்கள், வனவிலங்குகளிடம் கொண்ட அச்சத்தால் நடுங்கியவாறே, வீடுகளுக்கு வெளிப் புறத்தில் சுருண்டு கிடந்தன. ஆடுகள் புல்லில் படுத்திருந்தன. அந்தப் பெண் ஒரு பாயில் படுத்து, அருகில் கிடந்த குழந்தையை நீண்ட ரோமப் போர்வையால் மூடியிருந்தாள், ஒரு மேகம், ஏதோ ராட்சச நத்தையைப்போல், மலை மீதிருந்து குடிசைகளே நோக்கி ஊர்ந்து வந்தது. கனத்த இருள் பாறைகளையும் பாசியையும் மூடி மறைத்தது. துரங்கும் ஆடுகளின் ரோமத்தின்மீது இரவின் ஈரம் படிந்தது. வயலட் பூவின் இதழ்கள்.மேலே பணி விழுந்தது. சின்ன வண்டு ஒன்று, அதன் மணத்தில் கிறக்கமுற்று, பூக்கிண்ணத்தில் உறங்கிக்கிடந்தது. உலகமே மணம் நிறைந்த வயலட் பூவாக அந்த வண்டுக்குத் தோன்றியது.