பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை அவர்கள் என் ஜனங்களைக் கொல்கிரு.ர்கள். அவர்கள் என் சகோதரர்களைக் கொன்று தள்ளுகிருர்கள்’’. இலவசமாக முடிவெட்டிக்கொள்வதற்காக சலுனுக்குப் போயிருந்த ஏழை அமெரிக்கச் சிறுவனிடம் முடிவெட்டும் தொழிலாளி ஒருவன் இவ்வாறு புலம்புகிருன். ஆர்மேனியாவில் பிறந்த அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் சரோயன் எழுதிய எழுபதாயிரம் அளிரியர்கள்’ என்ற கதையில் இது வருகிறது. அது சோகமான, வேடிக்கையான, உள்ளத்தை உறுத்தக்கூடிய ஒரு கதை ஆகும். விஷயம் என்னவென்ருல், அந்த முடிவெட்டும் தொழிலாளி, தனது இனத்தாரின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருப்பதை நினைத்து வருத்தப்படுகிற ஒரு ஆர்மேனியனக இருக்கக்கூடும். ஏனெனில், பல நூற்ருண்டுகளாகவே ஆர்மேனியர்கள் அவ்வப் போது சித்திரவதைக்கும் அழிவுவேலைகளுக்கும் ஆளாகிவந்திருக் கிரு.ர்கள். 1915-ல் துருக்கிய அதிகாரிகள் பிற்பட்டவர்களை வெளியேற்றுவது” என்ற பெயரில் ஆர்மேனியர்களைப் பெரு வாரியாக நாடு கடத்தினர்கள். சுட்டெரிக்கும் சிரியா பாலைவனத்திலும், டைகிரிஸ் யூப்ரட்டிஸ் ஆறுகளின் வெள்ளப் பெருக்கிலும் சாகும்படி அவர்களைக் கொடுமைப்படுத்தினர்கள். அப்போது மட்டும் ஒன்றரை லட்சம் பேர் மடிந்துபோனதாகக் கூறப்படுகிறது. வரலாற்றில் இடம் பெற்றுள்ள முதலாவது பெரும் மக்கள் கொலை இதுதான். பதினேழாம் நூற்ருண்டில் இந்தியாவுக்கு முதலாவதாக வந்த ஆர்மேனியர்கள் உல்லாசப் பயணிகளோ லாபநோக்கு கொண்ட வணிகர்களோ அல்லர்: துருக்கிய மற்றும் ஈரானியப் படையெடுப்பாளர்களால் துன்புறுத்தப்பட்டு வெளியேறிய அகதிகளேயாவர். பொதுவாக, ஆர்மேனியா திறந்தவெளி மியூசியம் எனக் கருதப்படுகிறது. அதன் தலைநகரமான ஏரெவான், பாபிலோன் நகரைப் போலவே தொன்மையான கலாசாரத்துக்குப் பெயர் போனது. அந்த நாடு முழுவதும் இடிபாடுகள் நிறைந்து கிடக்கின்றன. அவை கடந்த பல நூற்ருண்டுகளின் வெற்றிகளை எடுத்துக்காட்டுவதோடு, படையெடுத்துவந்தவர்கள், கொள்ளைக் காரர்கள், மதவெறியர்கள் ஆகியோர் ஏற்படுத்திய காயங் களையும் வடுக்களையும் புலப்படுத்துகின்றன. இன்று ஆர்மேனியா