பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்தாங் அனுன்யன் 53 சிறிது நேரத்துக்குப் பிறகு அது தன் தலையை என் மடிமீது வைத்தது. என் உடம்பின் கதகதப்பு அந்தப் பிராணிக்குப் பிடித்திருக்கவேண்டும். ஏனெனில், சிறிது சிறிதாக, சுருள் சுருளாக, அது தன் தேகம் முழுவதையும் என் மடியில் சீராக வைத்துக்கொண்டது. எனது மேல்சட்டையின் ஒரத்தால் நான் அதை மூடினேன். அது சூடாகவும் சுகமாகவும் தூக்கத்தில் ஆழ்ந்தது. இப்போது நான்தான் குளிரால் நடுங்க நேரிட்டது. ஒரு பாம்பின் குளிர்ந்த உடலை உணர்ந்தபடி இருப்பது வெறும் விளையாட்டில்லை. இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக நான் அமைதி அடைந்தேன். பாம்புகளின் இயல்புகளை நான் நினைத்துப் பார்த் தேன்-அவற்றுக்கு நாம் தீங்கிழைக்காமல் இருந்தால், அவை களுக்கு நல்லவர்களாக நடந்தால், அவையும் நமக்குத் தீமை செய்யாமல் நம் நண்பர்களாக இருக்கும். இந்தப் பாம்பு வயது முதிர்ந்து, அனுபவம் மிக்கது என்று தெரிந்தது. நான் இருந்த நிலைமையைக் கண்டு என்ன அப்படியே விட்டுவைக்க அது தீர்மானித்திருக்கவேண்டும். "ஐயோ! வல்லமை மிகுந்த இயற்கை எனது துயர வேளையில் எனக்கு ஒரு பாம்பைத் துணைக்கு அனுப்பியிருப்பதாகத் தோன்று கிறது. நல்லது எனக்கு எது கிடைக்கிறதோ அதைக்கொண்டு நான் திருப்தியுறவேண்டும். இனி என்ன ஆகும் என்பதையும் பார்க்கலாமே என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். மேலேயிருந்து வந்துகொண்டிருந்த வெளிச்சம் மங்கலாகத் தொடங்கியது. விரைவிலேயே எனது பொந்துக்குள் காரிருள் சூழ்ந்தது. பாம்பு அமைதியாக உறங்கியது. அதன் குளிர் என் உடலைக் குத்தி உள்ளே பாய்ந்தது. அந்த இரவு எனக்கு ஒரு வருஷம் போல் இருந்தது. காலையில், பாம்பு கண் விழித்தது. தனது தலையை உயர்த்தி, மீண்டும் என் கண்களுக்குள் வெகுநேரம் பார்த்தது. முடிவில், அது தன் பெரிய வாயைத் திறந்து, முரடான முடிச்சு விழுந்த நாக்கினல் என் கைகளே நக்க ஆரம்பித்தது. நான் துணிவு பெற்று அதன் தலையையும் கழுத்தையும் தடவிக்கொடுத்தேன். அதன் குளிர்ந்த வழுவழுப்பான சருமத்தைத் தொட்டபோது அருவருப்பினல் என் உடல் நடுங்கிய போதிலும், நான் தடவினேன். எனது அன்பான வருடுதல்