பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்தாங் அன்ையன் 5ぎ தீ மூட்ட விரும்பினேன். ஆனல் அப்படி நான் சுதந்திரமாகச் செயல்படுவதைப் பாம்பு எவ்வாறு மதிக்குமோ என்று தயங்கி அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். மாலையில் மறுபடியும் பாம்பு என்னிடம் ஊர்ந்து வந்தது, அதன் பல சுருள்களை என் மடியில் வைத்து, மீதிப் பகுதியால் என் பாதங்களைச் சுற்றிக்கொண்டு துளக்கத்தில் ஆழ்ந்தது. வெப்ப காலத்தில்கூட, ஆராரட் பள்ளத்தாக்கில் இரவு நேரங்கள் குளிர்ந்துதான் இருக்கும், எனவே, குளுமையான ரத்தம் பெற்ற அந்தப் பிராணிக்கு இரவு நேரங்களில் கதகதப்பு அளிப்பதனுல் நான் எவ்வளவு பெரிய சேவை செய்துகொண் டிருந்தேன் என்பது எனக்குத் தெரியும். அதே வேளையில், நீ ஒரு பாம்பை வளர்த்தால், தொல்லைகளை எதிர்பார்த்திரு” என்ற பழமொழியையும் நான் எண்ணிப்பார்க்கத் தவறவில்லை. அது தரக்கூடிய தொல்லையின் நினைப்பு என் உடம்பைச் சிலிர்க்க வைத்தது. மறுநாள் மீண்டும் பாம்பு, வெயில் காயவும் ஏதேனும் உணவு தேடவும் வெளியே சென்றது. முயலை அது விட்டுச் சென்றது. எனது சக்கிமுக்கிக் கல்லும் இரும்பும் என்னிடமே இருந்தன. ஆகவே, நான் நெருப்பு மூட்டினேன். முயலைத் தோல் உரித்து, உப்புச் சேர்த்து, சிறிது வாட்டி எடுத்தேன். முறையான விறகு இல்லை. இலைகளும் சுள்ளிகளும் சரியானபடி எரியவில்லை. அதனால் முயல் மோசமாக அரைவேக்காட்டு நிலையில் இருந்தது. ஆனாலும், பசித்த வேட்டைக்காரன் நெருக்கடி வேளையில் பச்சை மாமிசத்தையும் தின்னக்கூடும். முயல் மிக மிருதுவாக இருந்தது. நான் அதில் பெரும் பகுதியை விரைவில் தின்றுவிட்டேன். உடனடியாக, அதை ஏன் சாப்பிட்டோம் என்ற வருத்தம் எனக்கு ஏற்பட்டது. எனக்குப் பெரும் தாகம் உண்டாயிற்று. பித்துப் பிடிக்கக்கூடிய அளவுக்கு அது மிகுந்தது. மாலையில் பாம்பு திரும்பி வந்தது. இம்முறை அது ஒன்றும் கொண்டுவரவில்லை. நான் பாதி முயலை வைத்திருந்தேன், அதன் குடல்கள், தோல், தலை, கால்கள் ஆகியவற்றை ஒளித்து வைத்திருந்தேன். பாம்பு வந்து சேர்ந்ததும், அதன் நல்லெண்ணத் தைப் பெறலாம் என்ற நினைப்போடு, எஞ்சிய முயல் இறைச்சியை அதனிடம் கொடுத்தேன். பாம்பு அதை ஒரே வாயில் விழுங்கியது. பின்னர் நான் முயல் தோலில் பொதிந்துவைத்த குடல் பகுதி களையும் தலையையும் பாம்பின் முன் வைத்தேன். அவை அனைத்தையும்கூட அது விழுங்கியது. ஒரு ஒநாய் அல்லது நாய் விழுங்குவதுபோல் அல்லாது, மெதுவாக, ஆனால் பசியோடு, உள்ளே இழுத்து இழுத்துத் தின்றது.