பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 துரோகி அதன் பிறகு நாங்கள் மேலும் சிறந்த நண்பர்கள் ஆளுேம். பாம்பு மறுபடியும் மூலையில் இருந்த வெள்ளைப் பாறையை நக்கத் தொடங்கியது. என்னேயும் அவ்வாறு செய்ய அழைப்பது போல், அடிக்கடி என்னைப் பார்த்துக்கொண்டே நக்கியது. நான் அருகில் சென்றேன். அந்தக் கல்லேக் கையில் எடுத்து, பாம்பின் விஷநாக்குப் பட்டிராத பக்கங்களை நக்கினேன். தாகம் அவ்வளவு தூரத்துக்கு என்ன வதைத்தது. அதனுல் நான் எதையும் முயன்று பார்க்கத் தயாராக இருந்தேன். பெர்சியப் பாலைவனங்களில் பயணம் போகிற மக்கள் தங்கள் வாய்களில் ஒரு சிறிய உருண்டைக் கூழாங்கல்லைப் போட்டு உறிஞ்சுவார்கள்; அது எச்சிலைச் சுரக்கச்செய்து தாகத்தைத் தணிக்க உதவும் என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். நான் கல்லை நக்கினேன். தாகம் தணிவதை உணர்ந்து வியப்படைந்தேன். அந்தப் பாருங்கல் ருசி எதுவும் இல்லா திருந்தது; ஆனாலும் அது தாகத்தைத் தணித்தது. அது எச்சிலைச் சுரக்கச் செய்த தலைா, அல்லது ஏதோ ஒரு மாயசக்தியை அந்தக் கல் பெற்றிருந்ததலைா-அது எனக்குத் தெரியாது. இந்தவிதமாக மேலும் இரண்டு தினங்களே நான் போக்கி னேன். அதற்குள்ளாகப் பசியாலும் தாகத்தாலும் நான் வெகுவாகப் பலவீனம் அடைந்தேன். என்னல் எழுந்து நிற்கவும் இயலவில்லை. ஒரு நாள் காலை பாம்பு என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டது. அதன் சுருள்களினுள் நான் கட்டுண்டிருந்தேன். இது மிகவும் சுகமான நிலை என்று பாம்பு கண்டுகொண்டது. ஏனெனில், இந்நிலையில் அதன் நீண்ட உடல் முழுவதையும் நான் வெம்மைப்படுத்த முடிந்தது. திடீரென உயரே இறக்கைகளின் படபடப்பு ஓசை எழுந்தது. ராஜாளியால் துரத்தப்பட்ட ஒரு புரு எங்கள் குழிக்குள் விழுந்தது. திகைப்படைந்து ஒரு மூலையில் அமர்ந்தது. எங்களைக் கண்டதும் அது பறந்து போக முயன்றது: ஆனல் பாம்பின் சக்தி வாய்ந்த பார்வை அதை அந்த இடத்தி லேயே நிலைபெற வைத்தது. ஒரு பாம்பின் பார்வைக்கு உரிய சக்தியை நான் அறிவேன். பறவை வசமாக மாட்டிக்கொண்டது என்று உறுதியாக உணர்ந்தேன். பாம்பு அதன் கண்களையே நோக்கியது. புரு செயல் இழந்து உடல் நடுங்க நின்றது. தனது இரையை வைத்த கண் வாங்காது பார்த்தபடி, பாம்பு அமைதியாக அதை நோக்கி ஊர்ந்தது. அபலைப் பறவையைக் கழுத்தில் கவ்வி எடுத்து என்னிடம் கொண்டுதந்தது.