பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்தாங் அனன்யன் 荡常 நான் இரண்டு துண்டு இறைச்சியை எடுத்துக்கொண்டு மீதியைப் பாம்பிடம் போட்டேன். அது பறவை முழுவதையும், இறகுகளையும் சேர்த்து விழுங்கியது. நான் பச்சை இறைச்சியில் உப்புச் சேர்த்துத் தின்றேன். பிறகு கல்லே நக்கத் தொடங்கினேன். தாகம் அடக்க முடியாதது ஆயிற்று. அதனால் நான் பித்தளுனேன். புலம்ப ஆரம்பித்தேன். சுவரைப் பிருண்டினேன். வெளியே போகவேண்டும் என்று வெறியோடு குதித்தேன். மீண்டும் உள்ளேயே விழுந்தேன். பாம்பு வியப்போடு என்னைக் கவனித்திருந்தது. நான் வெளியேற விரும்பினேன் என்பதை ஒருவாறு அது புரிந்துகொண்டது என்று தோன்றியது. ஏனெனில், அது பொந்தை விட்டு வெளிப்பட்டு, ஒரு செடியைப் பிடித்துக்கொண்டு வாலைக் கீழே தணித்தது. நான் அதை ஆச்சர்யமாகப் பார்த்தேன். அதன் செய்கையின் பொருள் எனக்குப் புரியவில்லை. ரொம்ப நேரம் அது அப்படியே இருந்துவிட்டு, பிறகு தன் வாலை மேலே இழுத்தது. தலையைத் தாழ்த்தி, கேள்விக் குறிப்போடு என்னைப் பார்த்தது. பின் மறுபடி முன்போல் கிடந்தது. அதன் வால், யானேயின் துதிக்கைபோல், என் தலைக்குமேல் தொங்கியது. "சில பாம்புகள் எவ்வளவு வலிமை மிகுந்தவை என நான் அறிவேன். அதன் வாலே நான் பற்றிக்கொண்டால் அது என்னை மேலே தூக்கிவிடும் என்ற உறுதி எனக்கு இருந்தது. அதே வேளையில் நான் அதைக் காயப்படுத்தி அதற்குக் கோபம் உண்டாக்கிவிடுவேனே என்ற பயமும் இருந்தது. அவ்வாருளுல். *அதனல் என்ன? இப்போது இருக்கிற நிலைமையைவிட மோசமாக ஒன்றும் ஆகிவிடாது’ என்று எண்ணினேன். பாம்பின் வாலைப் பிடித்தேன். அது பெரும் முயற்சி எடுத்தது. அதன் வால் ஒரு இரும்புத் துண்டுபோல் கடினமாயிற்று. உடனே அது என்னைக் குழிக்குள்ளிருந்து வெளியே தூக்கிவிட்டது. படுகுழியில் நெடுநாட்கள் இருந்த பிறகு மீண்டும் சூரிய வெளிச்சத்தைப் பார்த்ததும், எனது அன்புக்கு உரிய வயல் களையும், ஆராஜ் நதியின் அலைமோதும் தண்ணீரையும், எங்கள் கிராமத்தின் மீது சுருளும் புகையையும் கண்டபோது, நான் புதிதாகப் பிறந்ததுபோல் உணர்ந்தேன். ஒரு குழந்தை மாதிரி சந்தோஷப்பட்டேன். நான் என்னைக் காப்பாற்றிய பாம்பின் கழுத்தைக் கட்டிக் கொண்டு விம்மி அழத்தொடங்கினேன். என் தலை சுற்றியது.