பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 துரோகி மூர்ச்சித்து விழும் நிலையில் நான் இருந்தேன். என் கால்கள் என்னைச் சுமக்க முடியாது தள்ளாடின. நான் தடுமாற்றத்தோடு முன்னேறினேன். பாம்பு தன் தலையைக் காற்றில் உயர்த்தியபடி, புல் சரசரக்க, என் பின்னல் ஊர்ந்து வந்தது. வழியில் நாங்கள் ஒரு முயலைப் பார்த்தோம். அதை நான் சுட்டேன். பாம்பு துள்ளியது. அதன் கண்கள் கொடுரமாக நோக்கின. ஆனலும் நான் முயலை எடுத்துத் தனக்கு முன்னே வைத்ததைக் கண்டதும் அது அமைதி அடைந்தது. பாம்பு முயல் முழுவதையும் விழுங்கியது. அது பாம்பினுள் மெதுவாக நகர்ந்து, அதன் உடலை உப்பவைத்ததை நான் கவனித்தேன். ஆகவே, நட்பு உணர்வோடு நாங்கள் கிராமத்தை அடைந் தோம். இருள் பரவிக்கொண்டிருந்தது. மேய்ச்சலிலிருந்து திரும்பிவந்த பசுக்கள் கத்தின. கூரைகளின்மேலே புகை நின்றது. நாய்கள் குரைத்தன. பாம்பு அதற்கும் அப்பால் முன்னே போகாமல் பின் தங்கியது. நான் ஊருக்குள் நுழைந்ததும் திரும்பிப் பார்த்தேன். பாம்பு உலர்ந்த புல்லில் கிடந்து தன் கண்களால் என்னைப் பின்பற்றியது. என் மனைவியும் மக்களும் பெரிதாகப் பிரலாபித்து என்னை வரவேற்றனர். அனுதாபத்துக்கு உரிய அவர்கள் மறுபடியும் என்னைக் காணமுடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட் டிருந்தனர். குர்துக்கள் மாசிஸ் மலையில் என்னைப் பிடித்துக் கொலை செய்திருக்கவேண்டும் என்றே அனைவரும் எண்ணினர். கிராமத்தில் உள்ள மக்கள் என் கதையைக் கேட்ட பிறகு, பாம்புகளைப்பற்றி நல்லவிதமாக எண்ணினர். ஒரு வருஷம் சென்றது. அன்று கோடையின் வெப்பமான நாள். நாய்கள் தங்கள் நாக்குகள் வெளியே தொங்க, தொழுவங்களில் பதுங்கிக் கிடந்தன. கோழிகள் நிழல் அடர்ந்த மூலைகளில் பாதுகாப்பாக ஒதுங்கி ஒண்டியிருந்தன. எருமைகள் சேற்றுக் குட்டைகளில் தங்கள் கழுத்து வரை அமிழ்ந்திருந்தன. திடீரென்று பரபரப்பு ஓசைகளை நான் கேட்டேன். எங்கள் ஜனங்கள் எல்லோரும், பெரியவர்களும் சிறியவர்களும் தெருவுக்கு வந்து, சந்நியாசிகள்போல் உடை அணிந்திருந்த நான்கு அந்நியர்களைப் பின் தொடர்ந்து போவதைப் பார்த் தேன். ஒருவன் குழல் ஊதிக்கொண்டிருந்தான். இன்னொருவன் ஒரு பறையை அடித்து முழக்கினன். மற்ற இருவரும் வர்ண விசித்திரங்கள் நிறைந்த சில பெட்டிகளையும் பாம்புகள் இருந்த ஒரு இரும்புக் கூண்டையும் இழுத்துச் சென்ருர்கள். -