பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii சோவியத் யூனியனில் ஒரு குடியரசாக இருக்கிறது. அது முஆப்பர்ங்கான பிரதேசம். ஏறக்குறைய அதி உஷ்ண நிலைமை கொண்டது. 11,000 சதுரமைல் விஸ்தீர்ணமும், 218 மில்லியன் ஜனத்தொகையும் கொண்ட நாடு. யூரேஷியாவின் தேசப் படத்தில், காகஸ்சுக்குக் கீழே, கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் அதைக் காணலாம். பலதரப்பட்ட பயிர் வகைகள் விளையும் நிலம் என்று அது வர்ணிக்கப்படுகிறது. செம்பு, இரும்பு, சலவைக்கல் ஆகியவை அந் நாட்டில் கிடைக்கிற முக்கிய உலோகப் பொருள்கள் ஆகும். அநேகமாக உலகத்திலேயே மிகமிகச் செங்குத்தானது என்று கருதப்படவேண்டிய, பயங்கரமும் அழகும் கலந்த ஆழ்ந்த பள்ளப்பகுதியின்-அமெரிக்காவின் கிராண்ட் கேன்யான்’ பள்ளத்தாக்கின்-ஒரு முகட்டின் மேலே இருக்கிற ஆராய்ச்சி சாலை ஒன்றின் உள்ளே ஒரு கல் துண்டு இருக்கிறது. அதளுேடு ஒரு இரும்புத் துண்டும் கட்டப்பட்டுள்ளது. அந்த இரும்புத் துண்டை அக் கல்லுடன் உரசும்படி பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தப்படுகிருர்கள். அந்த ஆராய்ச்சிசாலை தோன்றிய பிறகு, சென்ற ஐம்பது வருஷ காலத்தில் கிராண்ட் கேன்யானைப் பார்ப்பதற்காக வந்த லட்சக்கணக்கான மக்கள் அப்படி இரும்புத் துண்டைக் கொண்டு கல்லே உரசியதன் விளைவாக, அந்தக் கல்லில் ஒரு சென்டிமீட்டர் ஆழத்துக்கு ஒரு பள்ளம் பதிந்திருக்கிறது. அதே ரீதியில் கொலராடோ நதியின் நீரோட்டம் கிராண்ட் கேன்யானில் மைல் கணக்கில் ஆழமான ப ள் ள ங் க ளே உண்டாக்கியிருக்கிறது என்பது இப்போது தெளிவாகியுள்ளது. அதற்கு நெடுங்காலம் ஆகியிருக்கிறது. இருபது லட்சம் வருஷங்கள். அவ் வட்டாரத்தின் ஆதிவாசி களான ஹோப்பிஸ் இனத்தவர் கிராண்ட் கேன்யானுடன்தான் சிருஷ்டியே ஆரம்பமாயிற்று என்று நம்புகிரு.ர்கள். அதை ஏற்றுக்கொள்ளலாம் போல்தான் நமக்கும் தோன்றுகிறது. ஹோப்பிஸ் இனத்தார் சிருஷ்டி காலத்துக்கே போகக்கூடும் எனில், ஆர்மேனியர்கள் நாகரிகத்தின் ஆரம்பத்துக்குப் போக இயலும். ஏனெனில், ஆர்மேனிய மலைச்சிகரமான மவுன்ட் ஆராரட் மீதுதான் பிரளயத்துக்குப் பின்னர் நோவாவின் படகு வந்து தங்கியதாகச் சொல்லப்படுகிறது. கி.பி. 808ஆம் வருஷத்தில், ரோமாபுரி கிறிஸ்துவ ராஜ்யமாக ஆவதற்கு முன்னரே, ஆர்மேனியா முதலாவது கிறிஸ்துவ ராஜ்யமாக இருந்தது. ஒருவேளை, பைபிளின் மொழி பெயர்ப்பே அதன் முதலாவது இலக்கியமாக இருக்கலாம்.