பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

的莎 துரோகி பாம்பு அச்சுறுத்தும் பார்வையோடு தன் கழுத்தை முன்னே நீட்டியது. அதன் கண்கள் சிவப்பாய் ஒளிர, அது சீறியது. முன்னல் பாய்ந்து சேவலின் கொண்டையில் கடித்தது. ஒரு சிறு துளி ரத்தம் கீழே வடிந்தது. கொண்டையில் லேசாக ஒரு கீறல் மட்டுமே தென்பட்டது. ஆல்ை, விஷம் மிக வலுவானதாக இருந்ததால், சேவல் உடல் வீங்கி எங்கள் கண் முன்னலேயே செத்தது. "இதை ஆழக் குழிதோண்டிப் புதையுங்கள். நாய்கள் அதைத் தொட்டுவிடக்கூடாது' என்று சொல்லி, சந்நியாசி பாம்புகளைச் சேகரம் செய்தான். பிறகு கூட்டத்தை நோக்கி அவன் சொன்னன் : 'நல்லது, மக்களே! இங்கே யார் வீட்டிலாவது பாம்புகள் தொல்லே தருகிறதா? நாங்கள் அவற்றை நொடிப்பொழுதில் அகற்றிவிடுவோம்.” 'ஏன், அவை எங்களுக்குத் தொல்லையாக இல்லை. ஒரு பாம்பு எங்களின் உபகாரியாக்கும்’ என்று கிழவர்களில் ஒருவர் சொன்ஞர். 'ஏவாளைக் கெடுத்த பாம்பு என்று முதல் மனிதனின் நண்பன் ஆயிற்று?’ என்று சந்நியாசி பரிகாசக் குரலில் கேட்டான். ‘எங்கள் பக்கத்து வீட்டு நெட்டைச் சுலைமான் உயிரை ஒரு பாம்பு காப்பாற்றிய நாள் முதல்தான்’ என்று என் நண்பன் அஸ்க்யார் கூறினன். 'ஒ, அவ்வளவு புத்திசாலியான பாம்புகள் உங்களிடம் இருக்கின்றனவா? அவர்கள் என் கதையை விவரமாகச் சந்நியாசிக்குச் சொன் ஞர்கள். அவன் கண்கள் பேராசையால் ஒளிர்ந்தன. ஆட்டின் ஈரல் துண்டைக் கண்டுவிட்ட ஒரு பூனை மாதிரி அவன் விழித்தான். "சுலைமான், என் நண்பனே! அந்தப் பாம்பை என்னிடம் தா. நான் அதைத் திபிலிசுக்கும், பாகு நகரத்துக்கும் எடுத்துப் போவேன். அதைப் பார்த்து மக்கள் வியப்படைவார்கள்’ என்று அவன் சொன்னன். "அப்படிச் செய்வது யோக்கியமான விஷயம் ஆகாது. அதற்கு நான் ஒருபோதும் சம்மதியேன்” என்று நான் பதிலளித்தேன். "சுலைமான், என் நண்பனே! அல்லா சாட்சி. இதில் அயோக்கியத்தனம் என்ன இருக்கிறது? நான் அதைப் பட்டிலும்