பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்தாங் அனன்யன் 莎置 வெல்வட்டிலும் வைத்துக் காப்பாற்றுவேன். ருசிகரமான இனிப்புப் பண்டங்கள் கொடுத்து வளர்ப்பேன். இந்தக் காட்டுச் செடிகளிடையே வசிக்கையில் அது சதா குளிராலும் பசியாலும் சிரமப்படும். என்னிடம் இருந்தால் அது கதகதப்போடு சுகமாக வாழும் . சும்மா எங்களுக்கு அந்த இடத்தைக் காட்டு, சுலைமான். நாங்களே அதை எடுத்துக்கொள்வோம். அதற்காக நான் உனக்குப் பத்து துமான் நாணயங்கள் தருவேன்.” 'சந்நியாசி, நீ தீர்க்கதரிசியின் பக்தன். இரக்கம் பற்றி உபதேசித்தவாறு நீ சுற்றித் திரிகிருய். ஆனலும் இங்கே நீ தீய காரியம் செய்யும்படி என்னைக் கட்டாயப்படுத்துகிருய்’ என்று நான் கூறினேன். 'ஆ என் பையா, பத்து துமான் நாணயங்களைக் கொண்டு ஒரு மாடு வாங்கலாமே என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். 'உன் பாடத்தை மன்னிக்கும்படி நான் தீர்க்கதரிசியிடம் வேண்டுவேன், சுலைமான். நீ சும்மா எனக்கு அந்த இடத்தைக் காட்டு.” சந்நியாசி கீழே ஒரு கம்பளத்தை விரித்து, முழந்தாளிட்டு, கிழக்கு நோக்கித் திரும்பி இருந்து, குனிந்து வணங்கினன். தன் கைகளே உயர்த்தி, முணுமுணுக்க ஆரம்பித்தான். அதனுல் ஊக்கம் பெற்ற நான், என் நண்பனே, என் உயிரைக் காப்பாற்றிய பாம்பை, பதினைந்து துமான்களுக்கு விற்க இசைந் தேன். மிக இழிந்த பிறவியானேன். சந்நியாசிகள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். என் பாம்பின் வீடான குழியை நோக்கி நாங்கள் எல்லோரும் போனுேம், அந்த இடத்தை நெருங்க நெருங்க, என் மனசாட்சி என்னை அதிகம் உறுத்தியது. நாசமாய்ப் போகிற இந்த தரித்திரம்-அது மனிதனுக்குச் செய்கிற தீங்குகள்-அவனே ஒரு திருடனுக, கொலைகாரணுக, அல்லது ஒரு துரோகியாக ஆக்கிவிடுகிறதே. 'பரவாயில்லை. பார்க்கப்போளுல் அது ஒரு ஊமைப் பிராணிதானே. காட்டிக்கொடுப்பதுபற்றி அதற்கு என்ன புரியப்போகிறது? அது ஒரு மனிதன என்ன! அதன் கண்களே நேரே பார்க்க நான் வெட்கப்படவேண்டியதில்லையே’ என்று என்னை நானே தேற்றிக்கொள்ள முயன்றேன். முடிவாக நாங்கள் அந்தக் குழியை அடைந்தோம். நான் ஒருபுறமாக ஒதுங்கி நின்றேன். பாம்பு பொந்தில்தான் இருந்தது.