பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லெரோ கான்ஸ்ாடியன் 65 நவசார்துக்கு அந்த ஊரில் உறவினர் எவரும் உயிரோடில்லை. அவன் வாழ்க்கை மகிழ்வு நிரம்பியதாக அமையவில்லை. அவனுக்குச் சொந்தமாகக் குழந்தை எதுவும் கிடையாது. அவன் மனைவி பல வருஷங்களுக்கு முன் இறந்துவிட்டாள். அவனுடைய சகோதரனும் மைத்துணியும் யுத்தத்தின்போது பட்டினியால் செத்துப்போனர்கள். அவர்களின் ஒரே மகன் அர்ஷாக் மட்டும் எஞ்சியிருந்தான். ஒடை ஒரத்தில் தரைமீது கிடந்த மண்வெட்டியை எடுத்து நவசார்த் தோண்ட ஆரம்பித்தான். மண் ஈரமாக, திராட்சை ரச வாடையுடன் இருந்தது. அவன் பத்து வருஷங்களுக்கு முன்பு புதைத்து வைத்த ஒரு சிறு ஜாடியை வெளியே எடுத்தான். அந்த மண்பாண்டத்தின் குளிர்ந்த ஸ்பரிசம் அவனுக்கு மகிழ்வளித்தது. திராட்சை மதுவின் நுண்மையான நறு மணத்தை நுகர்ந்தபடி அவன் புன்னகைத்தான். அது சிங்கப்பாலாக மாறிவிட்டது” என்று தானே சொல்லிக் கொண்டான். பிறகு, ஆற்றின் கரை அருகே நின்ற பெரிய மல்பெரி மரத்தின் கீழே தர்பூசணிப் பழங்களில் மிகவும் பெரிதாக இருந்தது நன்கு முற்றியிருந்தது என்பதை அவன் நினைவு கூர்ந்தான். அதன் காம்பை நறுக்கி, அவன் தனது நீண்ட சட்டையின் விளிம்பினல், பழத் தி ன் மீது படிந்திருந்த வெண்ணிறத் துாசியைத் துடைத்தான். அதன் மினுமினுப்பான கோடுகளை வியந்தான். என் அர்ஷாக்கிற்கு தர்பூசணிப் பழங்கள் பிடிக்கும்’ என்று அவன் முணுமுணுத்தான். கீழே முழந்தாளிட்டு அமர்ந்து, பழத்தைச் சுற்றிக் கைகளே வைத்து, கடுமையாக அழுத்தினன். அப்போது காதை அதன் மீது பதித்திருந்தான். பழத்திலிருந்து எழுந்த ஒசையைக் கேட்டு அவன் திருப்தியோடு தலையசைத்தான். அப்புறம் அவன் அத்திமரத்துக்குப் போனன். சிரமத்தோடு அதன் மீதேறி, தேன் என இனித்த பழங்களே, அங்கும் இங்கும் பறவைகள் கொத்தியிருந்தவற்றைப் பறிக்க லானன். மிகச் சிறந்த பழங்களாகத் தேடிப்பறித்து அவற்றைப் பிரகாசமான ஒரு கூடையில் மெதுவாகச் சேர்த்துவைத்தான். பின்னர் நவசார்த் கரை வழியே, ஆறு மாதமேயான வெள்ளைநிற ஆட்டுக்குட்டி ஒன்று மேய்ந்துகொண்டிருந்த இடத்துக்குப் போனன். அந்தக் குட்டியை அவன் விசேஷமான ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காப்பாற்றிவந்தான். 'அர்ஷாக் வீட்டுக்கு வந்துவிட்டான். அந்த நாளேக் காண்பதற்கு எனக்குக் கொடுத்துவைத்திருக்கிறது’’ என்று ஆ-5