பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வெள்ளை ஆட்டுக்குட்டி நவசார்த் தனக்குத் தானே கூறிக்கொண்டு, ஆட்டுக்குட்டியை அவிழ்த்தான். அது பலமாகக் கத்தியது. "நாம் போகலாம், பயலே. வா. அர்ஷாக் வீட்டுக்கு வந்திருக்கிருன்’ என்று நவசார்த் சொன்னன். கிராமத்துக்குச் செல்லும் செங்குத்தான பாதையில் அவன் ஏறி நடந்தான். கனத்த கூடை அவன் தோள்களை அழுத்தியது. மது ஜாடியில் தெறித்தது. எளிய சாதுவான ஆட்டுக்குட்டி சில சமயம் அவனுக்கு முன்னே ஓடியது, அல்லது அவனுக்குப் பின்னுல் நடந்தது. வழியில் அவன் சந்தித்த ஆட்கள், 'பகல் நேரத்தில் இவ்வளவு சீக்கிரமாக எங்கே போகிருய்?' என்று கேட்டார்கள். 'அர்ஷாக் பார்த்துப் போவதற்காக வீட்டுக்கு வந்திருக் கிருன்’ என்று கிழவன் பெருமையோடு பதிலளித்தான். வழியில் ஒவ்வொரு மரமும் செடியும், ஒவ்வொரு கல்லும் ஊற்றும் அர்ஷாக்கின் குழந்தைப் பருவத்தை அவனுக்கு நினைவூட்டின. அநேக தடவைகள் அவன் குழந்தையை முதுகில் சுமந்துகொண்டு அந்தச் செங்குத்தான பாதையில் சென்றிருக் கிருன். ஒய்வு பெறுவதற்காக அவன் இந்தக் கல்மீது அமர்வான். நவசார்த் ஒரு பீயர் பழத்தை அர்ஷாக்கிடம் கொடுத்து, அவனது மூக்கை தன் நீண்ட சட்டையின் விளிம்பால் துடைப்பான். அர்ஷாக் நீர் குடிக்க ஆசைப்பட்ட ஊற்று அதோ இருந்தது. நவசார்த் தன் கைகளில் நீரை அள்ளுவான். அவன் கைகளிலிருந்து அர்ஷாக் குடிப்பான். சிறிய பழத் தோட்டம் இதோ இருந்தது. மரங்கள் இன்னும் வளமாகக் கனிகள் தந்தன. பனிக்காலத்திலும் வெகுநாட்கள் பசுமையாக நின்றன. அர்ஷாக் ஏழு வயதாக இருந்தபோது, அந்தச் செர்ரி மரத்திலிருந்து கீழே விழுந்து காலை ஒடித்துக்கொண்டான். நவசார்த் அவனைச் சுமந்து, தூரத்துக் குடியிருப்பில் வசித்த டாக்டரிடம் கொண்டுபோனன். அப்புறம், அவன் அந்தப் பையனைக் கல்வி கற்பதற்காக அனுப்பி வைத்ததும், நகரவாழ்வுக்குத் தக்கபடி அர்ஷாக் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் விற்றுவிட்ட எல்லாப் பொருள் களையும்பற்றி நவசார்த் எண்ணிஞன். அது ஒரு நீண்ட பட்டியல் ஆகும். ஆனல் அர்ஷாக் யுனிவர்சிட்டியில் கற்றுத் தேர்ந்தான். அதன் பிறகு மாஸ்கோவில் மேல்படிப்புப் படித்தான். உலகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தான். தலைநகரில் அர்ஷாக் செய்துகொண்டிருக்கும் மிக முக்கிய மான வேலைபற்றியும், அவனுடைய பெரிய காரைப்பற்றியும்,