உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

பாஸ்கரத் தொண்டைமான்

ஆனால் அங்கு அடித்த காற்றில் நான் அணிந்திருந்த முக்குக் கண்ணாடி கழன்று படிகளில் உருண்டது. சரி கண்ணாடி உடைந்திருக்கும் பிரேமாவது மிஞ்சட்டும் என்று ஆள் அனுப்பி உருண்ட கண்ணாடியைத் தேடி எடுத்துவரச் சொன்னேன். என்ன அதிசயம்! கண்ணாடி உடைந்து சிதறாமல் அப்படியே இருந்தது. அந்தக் கண்ணாடியை அணிந்து கொள்வதில் ஓர் ஆனந்தம் அடைகிறேன். என் குருநாதர் ஆசியையும் திருமலை முருகன் அருளையும் நினைந்து நினைந்து மகிழ்கின்றேன் வையத்தில் வாழ்வதற்கு இது ஒன்று போதாதா என்ன!