பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

பாஸ்கரத் தொண்டைமான்



எனக்குப் பொன்னைக் கொடு, நோயற்ற வாழ்வைக் கொடு என்று பிரார்த்தனை செய்பவர்கள் தான் அதிகம்.


நோயில்த் தளராமல்
நொந்து மனம் வாடாமல்
பாயிற்கிடவாமல்

கண்பார்த்துக் கொள் ஐயா! என்பதுதான் எல்லோருடைய பிரார்த்தனையாக இருக்கும். அந்த பிரார்த்தனையே அடியேன் வதனம் 'அழகுவேல் காக்க' என்று தொடங்கி கேசாதிபாதம் உன்ன அங்கம் ஒவ்வொன்றையும் காக்கும்படி அவனிடம் பிரார்த்தித்துக் கொள்வது சிறப்புடையதுதானே? இன்னும், பில்லிசூனியம், பூதம், முனி இவற்றிலிருந்து காக்க அவனது துணை நாடி நிற்பதும் பாமர மக்களின் நித்யப்படி பிரார்த்தனையாக இருக்கும். பல வார்த்தைகளை அடுக்கடுக்காய்ச் சொல்லவும் வகை செய்திருப்பது அந்தக் கவசம். இத்தனை பிரார்த்தனைகளிலும் எனக்கு மிகவும் பிடித்தமான பிரார்த்தனை இதுதான்.


எத்தனை குறைகள்
எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன்
எத்தனை செயினும்
பெற்றவன் நீ குரு
பொறுப்பது உன்கடன்

என்று அவனிடத்திலேயே பாரத்தை போட்டு விண்ணப்பித்துக் கொள்வதை விட நாம் வேறு என்ன பிரார்த்தனை செய்ய இயலும்.

ஆண்டு தோறும் திருச் செந்தூரில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். அங்கு ஆறு நாளும் உண்ணாவிரதம் இருந்து நோன்பு நோற்பவர்களும் அநேகர். இவர்களில் பலரும் கந்தர் சஷ்டி கவசத்தைப் பாராயணம் பண்ணிக் கொண்டிருப்பர். ஆனால் பலருக்குப் பொருள் விளங்கியிருக்காது. நம்பிக்கையோடு செய்யும் பிரார்த்தனையாக இருக்கும். மாணிக்கவாசகர் சொன்னதுபோல் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லவும் தெரிந்து கொண்டோமானால் சிறப்பாக இருக்கும் அல்லவா. நானறிந்த மட்டில்