பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பாம்பன் சுவாமிகளின் நூல்களுக்கு உரை எழுதுவதையே தம் வாழ்க்கையின் தலையாய பணியாகக் கொண்டு வாழ்ந்து வருபவர். இந்தக் கட்டுரைகளையெல்லாம் ஆர்வத்துடன் வரிவிடாமல் படித்து, அனுபவித்து இந்த அணிந்துரையை அளித்திருக்கிறார். உண்மையில் இந்த நூலுக்கே அது அணி சேர்க்கிறது. அவருக்கு நன்றி சொல்ல நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த முகவுரையை முடிக்கும் முன்னர் ஒரு வார்த்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நூல், ஆசிரியர், தொண்டைமான் அவர்களின் பேத்தி, டாக்டர் உமா தேவசேனாவின் நிதியுதவியுடன் "தொண்டைமான் அறக்கட்டளையின்” இரண்டாவது வெளியீடாக உலா வருகின்றது. டாக்டர் உமா தேவசேனா கந்த சஷ்டியன்று பிறந்தவள் என்பது பொருத்தமாகவும் அமைந்துவிட்டது.

ராஜேஸ்வரி நடராஜன்

பாஸ்கர நிலையம்

31, 7வது குறுக்குத் தெரு

சாஸ்திரி நகர், சென்னை - 20